சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஏழாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகரக் காவல்துறையினர் இது தொடர்பான ஆவணங்களை கோயம்புத்தூர் காவல்துறையினரிடம் வழங்கினர். சென்னை மதுரவாயலிலுள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தியாகராய நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் இரண்டு நாட்கள் முன்பு காலை முதல் தேனி மாவட்டக் காவல்துறையினர் நடத்திய. சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும்
அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். வலையொளியில் காணொலி வெளியிட்டால் வீட்டில் காவல்துறை ஆவணங்களைத் தேடும் தான். தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்துக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய வீடியோ பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததையடுத்து
கடந்த 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சிராப்பள்ளி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில் அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தவர். "எனது கணவரைக் கைது செய்த பின்னர் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலுமில்லை. இது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால் இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை. எனது கணவரைக் கைது செய்த திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர், அவரைக் கைது செய்துள்ளோம்
விரைவில் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டு வரப்படுமென தெரிவித்தார். அதன் பிறகு எந்தவிதமான தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விபரமும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். திருச்சிராப்பள்ளி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதிலளிக்க வேண்டும். கைது செய்வதில் தவறில்லை. ஆனால் 48 மணி நேரத்திற்கு மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
ஆம் உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவர்கள் தண்டனை அடைவதும். வஞ்சகங்கள் வென்றதில்லை ! நெஞ்சுரம் தோற்றதில்லை ! உணர்வின் மொழி ஆளமானது வலிமையானதுநெருப்பைக் குப்பைகளால் ஒருபோதும் அனைத்து விட முடியாது.சவுக்கு சங்கரைத் தொடர்ந்து அடுத்த ஜாதி வெறியனும் கைது என பலரும் இந்தக் கைதை வரவேற்க .
ரெட் பிக்ஸ் youtube சேனலின் எடிட்டர் பிலிப்ஸ் ஜெரால்ட் புதுடில்லியில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். ரூபாய் 50 கோடியில பங்களா வாங்கி குடுத்தார்ன்னு சொன்னப்ப நிவேதா பெத்துராஜ் போட்டோவ முதல் பக்கத்துல போட்ட மீடியா தற்போது, சவுக்கு சங்கர் தேனி தங்கும் விடுதியில் கைதாகும் போது அவனுடன் உடனிருந்த செய்தியாளர் மாலதியைப் பற்றி மட்டும் யாரும் வாய் திறக்கப் போவதில்லை.
ரூபாய் 3 கோடிக்கு வீடு வேற வாங்கிக் கொடுத்துருப்பது நமக்குக் கிடைக்கும் கூடுதல் தகவல். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனலின் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் இல்லத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரிலுள்ள ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனல் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் இல்லத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
எஸ் பி ,யிடம் புகாரளிக்க வந்த பெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி
காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது கையை உடைத்ததாகக் குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும் காவல்துறை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து சவுக்கு சங்கரை விசாரித்த நிலையில் கோயமுத்தூரில் யூடியூபர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 31.10.2023 அன்று Red Pix யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி, இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையைச் சேர்ந்த வழகறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் மாநகர் பந்தயச் சாலை காவல் நிலையத்தில் 153, 153(A)(1)(a), 153(A)(1)(b)504, 505(ll) IPC ஆகிய சட்டப்பிரிவுகளில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்பவும் ஒரு ஆட்டத்துல ஆட்டத்தை ஆடறவனை விட அந்த ஆட்டத்தை அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருந்தவன் திடிர்னு உள்ளே நுழைந்து ஆட ஆரம்பிச்சிட்டான்னா. ஈசியா முடிச்சிட்டு போயிட்டே இருப்பான்.
சிலரிடம் பறித்து சிலரிடம் கொடுப்பதனால் எந்தப் பயனும் இல்லை. உன் உழைப்பில் இருந்து கொடுத்துப்பார் உன் வியர்வையும் ருசிக்கும். யாருக்கும் ஏதும் தெரியவில்லை என்று ஆடிக்கொண்டிருக்காதிர்கள்.
இறைவனின் ஆணையால், நீங்கள் கண்காணிக்கபட்டுக்கொண்டிருக்கறிர்கள். உங்களுக்கான தீர்ப்பு நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை...ஓருநாள் மொத்தமாக கணக்கில் கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும்..
காத்திருங்கள். என்ற நிலையில் சங்கர் பேசியது மிகத் தவறானது. பெலிக்ஸ் சங்கரின் பேச்சை எடிட் செய்யாமல் வெளியிட்டதும் நூறு சதவீதம் தவறானது. அதை நியாயப் படுத்த முடியாதது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது பெண்கள் அதிக அளவில் கூடி சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் குவிந்த பெண்கள் துடைப்பத்துடன் வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டது. மேலும், காவல்துறை வாகனத்தின் முன் படுத்துக்கொண்ட மூதாட்டி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டு வந்த போது புதுக்கோட்டை வழக்கறிஞர் ரங்கபதாகதேவி தலைமையில் பல பெண்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
ஆனால், இப்போது சங்கருக்கும் பெலிக்சுக்கும் நடப்பது பெண் காவலர்கள் குறித்த பேச்சுக்கான அவதூறு வழக்கிற்காகத்தான் என்று இன்னும் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.குற்றப்பத்திரிக்கை வந்த பிறகு சட்ட வல்லுநர்கள் வழக்கை எளிதாகவே உடைப்பார்கள் என்பது நடக்கும் நிகழ்வுகளை வைத்து உணரலாம்.
ஆனால் ஏதோ ஒரு வகையில் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டாரோ என்ற எண்ணத்தைத் தான் இதுவரை பரப்புகிறார்கள்.
சொத்துப் பட்டியல் என்று ஒன்றை வெளியிடுகிறார்கள். சவுக்கு சங்கருக்காகவும், பெலிக்சு செரால்ட்டிற்காக அரசியல் கட்சிகள் எதுவும் குரல் எழுப்பவில்லை. சீமான் தவிர
சேலம் ஈரோடு மாவட்டங்களில் பழங்குடியினர் வீடுகளை அடித்து நொறுக்கி பொருள்களை வாரி இரைத்த காவல்துறையினர் மற்றும் மாநில அரசு பற்றி யாரும் பேசினார்களா? தெரியவில்லை குடும்பத்தில் தெரிவிக்காமல் கைது செய்து இரண்டு நாள்களாக என்ன செய்கிறார்கள்? என சவுக்கு சங்கரின் மனைவி மாலதி எக்ஸ் தளத்தில் பரபரக்கும் பதிவுகளை வெளியிட்டார்.
அதில், "சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் எதிர் வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும். ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்குத் தெரிந்த சங்கருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 35 ஆயிரம். தினமணியிலிருந்து வந்தது மாதம் ரூபாய்.10,000 சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது. மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக் கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு ரூபாய்.2000 வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.
அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்குக் கவலையில்லை. அந்தத் தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும் பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை. தூத்துக்குடி கலவரத்திலிருந்து, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கில்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதி காத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது தான். 4மாதக் குழந்தையுடன், எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கு இணையத் தளத்தில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது VAO வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டுத் தூக்க வழிவகை செய்வேன் எனவும் மிரட்டினான் அவன்.
அதன் பின்பு, அவன் சம்மந்தப்பட்டவற்றை முழுவதுமாய் நிராகரித்தேன். எவ்விதப் பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை, ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்குப் பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும். அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வளர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாமானிய ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் 'சாதாரண ஆங்கர் மாலதிக்கு அசையா சொத்துகள் (100 பவுன்), அசையும் சொத்துகள்(1கோடி வீடு) இது எப்படி வந்தது? மாலதியின் வங்கி அக்கெளண்ட் டிரான்ஸ்சேக்ஷன் பழையதும், சங்கரின் நட்புக்குப் பிறகான கணக்குகளையும் கணக்கிலெடுக்க வேண்டும். சங்கரின் சட்டப்பூர்வ மனைவி நான்' எனக் கூறி அதனை வருமான வரித்துறைக்கு டேக் செய்துள்ளார். இவ்வாறு வழக்கு மாநிலத்தில் பல பகுதிகளில் நகர்கிறது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 'ரெட் பிக்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
MEDIA PRIVATE LIMITED இன் நிறுவன அடையாள எண் (CIN) U22130TN2013PTC091050 ஆகும். subashiniassociates@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட முகவரி எண்.21, முதல் பிரதான சாலை, சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை சென்னை 600004 என்ற முகவரியில்
ரெட்பிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்பது 09-05-2013 அன்று இணைக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் . இது ஒரு அரசு சாரா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் RoC-Chennai இல் பதிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் 100000.00 மற்றும் அதன் செலுத்தப்பட்ட மூலதனம் 100000.00. தற்போது - செயலில் உள்ளது . அடிப்படைத் தகவல். CINU 22130TN2013PTC091050 இணைக்கப்பட்ட தேதி 09-05-2013. பதிவு செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடு நிறுவனங்களின் பதிவாளர் ரோசி-சென்னை பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனம் துணை வகை அரசு சாரா நிறுவனம் ஆகும். இந்த நிலையில் தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இது மே மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணையை மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கோயமுத்தூர் நீதிமன்றத்தின் நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
அதன்படி, கோயமுத்தூரிலும், மதுரையிலும் தாக்கல் செய்த ஜாமீன் வழக்குகள் மே மாதம் 20 ஆம் தேதி ஒரே நாளில் விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள்