இந்தியாவில் தடுப்பூசி மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு திட்டமிடலில் டிஜிட்டல் மயமாக்கல்
தடுப்பூசி மேலாண்மை, திறன் மேம்பாடு, தகவல் தொடர்பு திட்டமிடல் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையும், ஐநா மேம்பாட்டுத் திட்டமும் கையெழுத்திட்டன
தடுப்பூசி மேலாண்மை, திறன் மேம்பாடு, தகவல் தொடர்பு திட்டமிடல் குறித்து ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்துடன் இந்தியாவின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதுதில்லி, லோதி எஸ்டேட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாய், ஐநா வளர்ச்சித் திட்டத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி திருமதி கெய்ட்லின் வைசன் ஆகியோருக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உத்திசார்ந்த கூட்டாண்மை இந்தியாவில் தடுப்பூசி மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு திட்டமிடல் ஆகியவற்றின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திருமதி அல்கா உபாத்யாய், நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிக்க நம்பகமான, வலுவான மற்றும் திறமையான விநியோக அமைப்புகள் முக்கியம் என்று கூறினார். 142.86 கோடி மக்கள் தொகையுடனும், 53.57 கோடி பண்ணை விலங்குகளுடனும் மற்றும் 85.18 கோடி கோழிகளின் எண்ணிக்கையையும் கொண்ட இந்தியாவில் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே அனைத்துக் கால்நடை சேவைகளையும் வழங்குவதும், அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதும் சவால் மிக்க பணி என்று தெரிவித்தார்.
கருத்துகள்