பாவப்பட்ட பசித்த மக்கள் இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்
இந்தியாவில் தற்போது பாவப்பட்ட பசித்த மக்களுக்கு இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்
அப்பாவி ஹிந்து சமூகத்தின் குழந்தைகளை மதமாற்றம் செய்ய முயலும் கும்பலின் வழிநடத்தும் பிரிவாக பெந்தகோஸ்து உள்ள நிலையில் பெந்தகோஸ்து எனும் சொல் கிரேக்க மொழியாகும்.
யூத மக்கள் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஏழு வாரங்கள் கணக்கிட்டு, ஐம்பதாம் நாளில் "அறுவடைப் பெருவிழா". துவக்கத்தில் இந்த கிருத்துவ மதத்தில் பெந்தகோஸ்து பிரிவு வந்தது தற்போது இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் மதமாற்றத்தின் காரணியாகவும் அதுவே உள்ளது
ஒராயிரம் ஆண்டு முன் 28. 11. 1001 ல் பெஷாவரில் நடந்த போரில் ஹிந்து அரசன் ஜெயபாலனை மேற்கத்திய இஸ்லாமிய கஜினி மாமூது படைகளுக்கு எதிரான போரில், குறிப்பாக கஜினியின் இளம் மஹ்மூத்துக்கு எதிரான போரில் இராணுவம் நம்பிக்கையற்றதாக இருந்தது. 1001 ஆம் ஆண்டில், சுல்தான் மஹ்மூத் ஆட்சிக்கு வந்து, ஹிந்து குஷின் வடக்கே கராகானிட்களுடன் ஆக்கிரமிக்கப்பட்ட உடனேயே , ஹிந்து அரசன் ஜெயபாலன் கஜினி மாமூதை மீண்டும் ஒருமுறை பலமாகத் தாக்கினார்,
மேலும் இன்றைய பெஷாவர் அருகே சக்திவாய்ந்த கஸ்னாவிட் படைகளால் மற்றொரு தோல்வியையும் அவரே சந்தித்தார் . பெஷாவர் போருக்குப் பிறகு , அவர் ஷாஹிகளுக்கு பேரழிவையும் அவமானத்தையும் கொண்டு வந்ததாக அவரது குடிமக்கள் நினைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படித்தான் வாள் முனையில் மதம் மாற்றிய நிகழ்வு பாரதத் துணைக் கண்டத்தில் அரங்கேற்றிய நிகழ்வு. மன்னர் ஜெயபாலனுக்குப் பிறகு அவரது மகன் ஆனந்தபாலா , ஷாஹிகளின் பிற தலைமுறைகளுடன் சேர்ந்து முன்னேறி வரும் கஸ்னாவிகளுக்கு எதிராக பல்வேறு போர்களில் பங்கேற்றார் இருந்தும் தோல்வியுற்றார். ஹிந்து ஆட்சியாளர்களும் பரந்து விரிந்து வாழ்ந்த ஹிந்து மக்களும் இறுதியில் காஷ்மீர் சிவாலிக் மலைகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போதிருந்த மன்னர் ஜெயபாலன் போல இப்போதும் ஆங்காங்கே ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் பணி உள்ளது, அதை நிரூபிக்க இப்போது நடந்த தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மதமாற்றக் கும்பலின் செயல்பாடு. விபரம் வருமாறு
மலம்பட்டியிலிலிருந்து பாக்குடி செல்லும் வழியில் கிருத்துவ பெந்தகோஸ்தே சபை என உருவாக்கி தொடர்ந்து ஐந்து வருடமாக பாக்குடி , சுக்காங்காடு , வளதாடிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஹிந்து மக்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளை நடனம் சொல்லிக்கொடிக்கிறோம் பிரியாணியுடன் சாப்பாடு தருகிறோம் மற்றும் நீங்கள் தொடர்ந்து மூன்று முறை சபைக்கு வந்து எங்கள் ஏசு மதமாற்றப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டால் உங்களுக்கு பரிசுகள் தருகிறோம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி தீவிர மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் ,
கடந்த மூன்று வருடமாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் சொல்லியும் கேட்காது தொடர்ந்து ஹிந்துக் கடவுள்களை இழிவாகப் பேசுவதும் அதாவது கருப்புசாமி , காளியம்மன் போன்ற கடவுள்கள் சக்தியற்ற கடவுள் எனவும் ஏசு ஒருவரே உண்மையான கடவுள் என்றும் கூறி குழந்தைகளை சீரழித்து வருகிறார்கள் எனவும் !
07 மே 2024 அன்று காலையிலேயே வந்து இதுபோன்று ஹிந்து சமூகத்தின் குழந்தகளை கூட்டி பிரச்சாரம் செய்து வந்த காரணத்தால் இனிமேல் இதுபோல் வரதீர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறியதற்கு மிரட்டி உங்களை 10 நாளில் கொன்று விடுவோம் என்று சவால் விட்டபடி மிரட்டுகிறார்கள் ! இவ்வளவு தைரியமாக இது யார் கொடுத்த தைரியத்தில் மாத்தூர் காவல் நிலையத்தில் இன்று (8 மே 2024) புகாரின் மீதான விசாரணையில் ஹிந்துக் குழந்தைகளை பெந்தகொஸ்தே சபைக்கு 100 சதவீதம் அழைத்து செல்லக்கூடாது என்று. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் படி புகார் அளித்தவர்களுக்கு உறுதியும் மற்றும் அனுமதியின்றி நடந்து வரும் சர்ச் பெந்தகோஸ்து சபையை விசாரித்து மூடவும் காவல்துறை ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எனவும் இது போன்று ஹிந்துக் குழந்தைகளை (18 வயதுக்குள் ) பெந்தகோஸ்து சர்ச்சுக்கு அழைத்து சென்று ஜெபகூட்டம் நடத்தினால் உடனே யாரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும் என தடுத்து நிறுத்திய பாக்குடி RSS அமைப்பின் மாவட்ட நிர்வாகியான சசிகுமார் தெரிவித்தார்.
கருத்துகள்