உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19, மற்றும் 26, மே மாதம் 7 ஆகிய தேதிகளில் 3 ஆம் கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்தது. 4-ஆம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலுள்ள 96 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில்,
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதிக் கட்டமாக ஜூன் மாதம் 1-ஆம் தேதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி களமிறங்கும் தொகுதியான வாராணசி மிகவும் கவனம் பெற்றிருந்த நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் உடன் சென்றனர். வாராணசியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு
மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். வாரணாசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்தத் துடிப்பான நகரத்தின் வளர்ச்சிப் பயணத்தைத் தொடர மக்களின் ஆசிகளையும் ஆதரவையும் வேண்டுகிறேன். என் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், 'காஷி கே கோட்வால்' என்று போற்றப்படும் கால பைரவர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
கருத்துகள்