புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்றுக் கொண்டார்
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் புதிய இயக்குனராக முனைவர் மகரந்த் காங்ரேகர் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால் 18.04.2024 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (06.05.2024) காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் தற்போது பொறுப்பேற்றுள்ள முனைவர் மகரந்த் காங்ரேகர் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் காரக்பூரில் கட்டிடப் பொறியியல் துறையின் பேராசிரியராக 2004-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு பொறுப்பு இயக்குநராக இருந்த முனைவர். உஷா நடேசனுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
கருத்துகள்