விராலிமலை அருகிலுள்ள வானதிராயன்பட்டி அத்திப்பள்ளம் எனுமிடத்தில் உள்ள .பட்டாசுக் கிடங்கில்
இரண்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டது அந்த வெடிப்புச் சம்பவத்தில் கார்த்திக் எனும் 27 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த பட்டாசுக் கிடங்கு அரசு உரிமம் பெற்று தான் செயல்பட்டு வந்ததாகவும், மின்கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெல்டிங் வைக்கும் போது ஏற்பட்ட மின் கசிவால் பட்டாசுக் குடோனில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. .கார்த்திக்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சிவனேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
கருத்துகள்