இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானம் செய்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இறுதிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியாகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 30-ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருபவர்,
அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்பு படகு மூலம் கடல் நடுவிலுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2019 மக்களவை தேர்தலும் 7 கட்டமாக நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. மே 17-ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல தலைவர்களும் ஓய்வெடுக்க தொடங்கினர். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார். சாம்பல் நிற அங்கி, இடுப்பில் காவி , தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி அணிந்திருந்தார்.
உலங்கு வானூர்தி தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்று அரை மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்தார். பிரதமர் எடுத்து வந்திருந்த சிறப்பு அங்கவஸ்திரங்கள் சிவலிங்கத்துக்கு சாற்றி அதன் பின்னர்,
கேதார்நாத்திலுள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்திலிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் மின்சார வசதி கிடையாது. ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. செல்போன் நெட்வொர்க் செயல்படாது என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் சார்பில் இன்று
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்!
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு - சிபிஐ(எம்) சார்பில் எழுதப்பட்ட கடிதம்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நரேந்திர மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று (29.05.2024) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜுன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள்.
மே முப்பது முதல் இரண்டாம் தேதி வரை பிரதமர் கன்னியாகுமரியில் தவம்.
பாஜக ஆட்சிஅமைகிறதோ இல்லை அமையாதோ. ஆனால் நான் பரமாத்மா என்றவர் கடவுள் என்னை என்னுள் இருக்கும் ஜீவாத்மா மூலம் முனிவராகச் சொன்னார் எனக் கூறப் போகிறாரோ ?என்னவோ நடக்கிறது அது மர்மமாக இருக்கிறது. அதுபோல இன்று தேய்பிறை அஷ்டமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் தரிஷனம் செய்கிறார்.
இன்று மதுரை வரும் அவர் அங்கு. ஸ்ரீ மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார்.
பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மாலை 3.30 மணிக்கு கானாடுகாத்தான் விமான தளத்தில் இறங்கி புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு
அங்கிருந்து கார் மூலம் 6 கிமீ.தொலைவிலுள்ள திருமயம் 108 திவ்ய தேசம் சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயம் மற்றும் கோட்டை பைரவர் ஆலயத்தில் தரிஷனம் செய்கிறார்.
இன்று மாலை சுமார் 5 மணிக்கு அங்கிருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மூலமாக மதுரை செல்கிறார்.
கருத்துகள்