கோவில் திருவிழாவில் ஆட்டு கிடா ரத்தம் குடித்தவர் பலி.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கொப்பலூர் செட்டியாம்பாளையம் கிராமத்தில் அண்ணமார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 'பரண் கிடாய்' எனும் பூஜை நடைபெறும் அதன்படி நேற்று பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. அதாவது செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட கற்கள் மீது அமைக்கப்பட்ட பரண் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் கொடுக்கும் ஆட்டுக் கிடாய்கள் பூசாரிகளால் வெட்டப்படும்.
வெட்டும் போது வெளிப்படும் ரத்தத்தை பூசாரிகள் வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிடுவது வாடிக்கையாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நல்ல கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பூசாரியான பழனிசாமி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் நேற்று கோவிலில் பரண் கிடாய் பூஜை செய்ததில் 20 க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பூசாரிகளும் குடித்தனர். சிலர் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டு. உடனடியாக கோபிசெட்டிப்பாளையம் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டின் பச்சை ரத்தத்திலுள்ள நுண்ணுயிர் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.
கருத்துகள்