மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் மதுரை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 293 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களால் எழுத்தாளரும் அரசியல் பிரமுகருமான தமிழருவிமணியனுக்கு
திருமுருக கிருபானந்த வாரியார் விருது வழங்கியருளினார்கள் (கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரது சார்பாக அய்யல்ராஜ் பெற்றுக் கொண்டார்) . சிறப்புச் சொற்பொழிவாக காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் சைவத்திரு தெய்வ சிகாமணி அவர்கள் சைவமும் தமிழும் எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் மதுரை ஆதீனம் 293 ஆவது ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழக்கறிஞர் அ.சிவதாணு அவர்களுக்கு
வள்ளலார் விருதும் வழக்கறிஞர் சைவத்திரு சு .அசோகன் அவர்களுக்கு மருதுபாண்டியர் விருதும் வழங்கியருளினார்கள். சிறப்புச் சொற்பொழிவாக சைவத்திரு பவானி தியாகராசன் சொற்பொழிவு ஆற்றினார்கள். மதுரை ஆதீனக் குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் முதல் நாள் நிகழ்வில் மதுரை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 293 ஆவது குருமகாசந்நிதானம் முனைவர் சரசுவதி இராமநாதனுக்கு மங்கையர்க்கரசியார் விருதும் கயிலைமணி அப்பாக்குட்டி வேதரத்தினத்திற்கு வ.உ.சி விருதும் வழங்கியருளினார்கள்."மருதுபாண்டியர் விருது 2024 ,
கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் வழக்கறிஞர் ஏ எஸ் அசோகன் பெற்றிருக்கிறார்
மதுரை ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் குருமகா சன்னிதானத்தின் கரங்களில் விருதும்,ப ணமுடிப்பும் பெற்றவருக்கு
" சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு" சார்பாக மீ.மனோகரனின் "மருதுபாண்டிய மன்னர்கள்" நூல் பரிசளிக்கப்பட்டது. மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் தமிழாகரர் திருஞானசம்பந்தப் பெருமான் வழிநின்று செங்கோலோட்சி அருளாட்சி செய்து வரும் மதுரை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 293 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுறைக்கலாநிதி சிவகுமார் ஓதுவார் மூர்த்திக்கு திருஞானசம்பந்தர் விருதும் , சித்தாந்த ஜோதி டாக்டர் உமாமகேஸ்வரிக்கு மங்கையர்க்கரசியார் விருதும் , தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர் பாலகரண் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முதல் மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர் ந.அபிமன்யு இருவருக்கும் முத்துராமலிங்கத் தேவர் விருதும் வழங்கியருளினார்கள். சிறப்பு நிகழ்வாக திருஞானசம்பந்தர் விருது பெற்ற மயிலாடுதுறை சிவகுமார் ஓதுவார் மூர்த்திகள் மற்றும் அவரது குழுவினரின் திருமுறை இசைக் கச்சேரி நடைபெற்றது .
கருத்துகள்