முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் ராணுவ வீரர்களின் நலத்துறைச் செயலாளர் சிக்கிம் எல்லைப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார்
முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையின் குறைதீர்ப்பு முகாம் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் ராணுவ வீரர்களின் நலத்துறைச் செயலாளர் டாக்டர் நித்தேன் சந்திரா வடகிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லைப்பகுதிக்கு இன்று (13.05.2024) பயணம் மேற்கொண்டார்.
சிக்கிம் மாநில அரசின் தலைமைச் செயலாளர் திரு வி பி பதக்-ஐ கேங்டாக்கில் சந்தித்த டாக்டர் நித்தேன் சந்திரா, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நலத்திட்டத்திற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
மாநிலத் தோட்டக்கலைத் துறை உதவியுடன் முன்னாள் ராணுவ வீரர்களின் கூட்டுறவு அமைப்பின் மூலம், இந்தப் பிராந்தியத்தில் ஆரஞ்சு, கிவி, அவகோடா போன்ற பழவகைகளின் சாகுபடியை ஊக்குவிப்பது பற்றியும் விவாதித்தனர். பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற குறைதீர்ப்பு முகாமில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
கருத்துகள்