இராணுவத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றுக் கொண்டார்
ஜெனரல் மனோஜ் பாண்டேவிடமிருந்து ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவ தலைமைத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 30-வது ராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி இன்று (30 ஜூன் 2024) பொறுப்பேற்றார்.
ஜெனரல் உபேந்திர திவேதி 40 ஆண்டுகள் ஆயுதப் படைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர்,
1984-ல் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவில் சேர்ந்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மாறுபட்ட செயல்பாட்டு சூழலில், தனித்துவமான பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
ஜெனரல் திவேதி பாதுகாப்பு களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளவர் ஆவார். செயல்திறனை மேம்படுத்த ராணுவ அமைப்புகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த அணுகுமுறைகளை அவர் கொண்டுள்ளார்.
கருத்துகள்