பூட்டிய வீடுகளில் இரவுத் திருட்டில் சிக்கி தலைமறைவான பாஜக நிர்வாகி கைது.
இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் திருட்டில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் கைது
அவரிடமிருந்து ரூபாய் 51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் அவரது கிராமத்தில் சொகுசான வீடும் கட்டியுள்ளார் அதன் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பூட்டிய வீடுகளில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்ததாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் மீது புகார் எழுந்ததையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் பிரபாகரனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய்.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் அவனது கிராமத்தில் சொகுசான வீடு கட்டியுள்ள தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பற்றியும் காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதம் முன்பு இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் வழிபறி செய்ததாக வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவராக இருப்பவர் கிளி என்கிற சதீஷ் (வயது 34) இவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக வழக்குகளும் உள்ளது . அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக இவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, சதீஷ் வழிமறித்து கத்தியைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாகப் பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழிபறியில் பாதிக்கப்பட்ட விஜய் என்பவர் கடந்த மாதம் கொடுத்த புகாரின் அடிப்படையில், பள்ளிகொண்டா காவல்துறையினர் சதீஷ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல், வேலூர் மாவட்டம், வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கடந்த மாதம் இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடிகாவல நிலையத்திற்கு அளித்த தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் நிலையத்தினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், இருவரும் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நவீன்குமார் என்பதும், அதில் ராஜேஷ் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்டச் செயலாளராக இருப்பதும், நவீன்குமார் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்டப் பொறுப்பாளராக இருப்பதும் தெரியவந்தது. இதில் ஒரு உண்மை யாதெனில் இவர்கள் அனைவரும் துவக்க காலத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினராக இருக்க வாய்ப்பில்லை, இடையில் சேர்ந்து பொறுப்பு வாங்கிய நபர்கள் தான் இப்போது அதிகம் சிக்கி வருகிறார்கள், பழைய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் சாதுவான நடவடிக்கைகள் உள்ளவர்கள் ஆவர். குற்றவாளிகள் நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாநில மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் விடுக்கும் கோரிக்கையாகும்.
கருத்துகள்