கோயம்புத்தூர் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் அனுமதித்த நில அளவைத் துறை பணியாளர்கள் இருவர் கைது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நகர சார் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சுரேஷ்குமார். இந்தாண்டு ஜனவரி மாதம் தனது அலுவலகத்தில் பணி புரியும் முதுநிலை வரைவாளர் நில அளவை மற்றும் பதிவேடுகளிவ் பட்டா மாறுதலுக்கான கணிணியில் பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை அவரது அனுமதியில்லாமல் எடுத்து அதனை அவர் பயன்படுத்துவது போலப் பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றம் செய்ததாகவும். பட்டா மாறுதலுக்கான அனுமதி வழங்கியும் அடுத்த கூட்டத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்ட பின் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வந்ததாகவும், அந்த அலுவலகத்தில் அவர்களுடைய பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர்களை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரளிக்கப்பட்டது.
அளிக்கப்பட்டட புகாரின் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட பூஜியக் குற்றத்தடுப்புக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சவுரிபாளையம் பகுதியில் வசிக்கும் அருள்பிரதாப் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்