ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் பங்களாதேஷின் சட்டோகிராம் சென்றடைந்தது
கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ரன்வீ்ர் கப்பல் நேற்று (2024 ஜூலை 29) பங்களாதேஷின் சட்டோகிராமுக்குச் சென்றடைந்தது. இந்த கப்பலுக்கு பங்களாதேஷ் கடற்படை உற்சாக வரவேற்பு அளித்தது.
இந்தப் பயணம், இந்திய மற்றும் பங்களாதேஷ் கடற்படைகளைச் சேர்ந்த வீரர்கள், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பரஸ்பர கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துறைமுக கட்டம் முடிந்ததும், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல், பங்களாதேஷ் கடற்படையின் கப்பல்களுடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும்.
ஐஎன்எஸ் ரன்வீர், ஏவுகணை அழிப்புக் கப்பலாகும். இது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான பாகங்கள் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.
கருத்துகள்