விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் காரியாபட்டி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில்
கணினி அறிவியல் ஆசிரியையாக மதுரை வில்லாபுரத்தைச் சேர்த்த பாத்திமா கனி பணிபுரிந்து வந்தார். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அப்பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர் ஒருவரிடம் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளார். அந்த மாணவருக்கு விபத்து நடக்கவே அவரிடம் மிகுந்த இரக்கம் காட்டியதுடன் வீட்டுப்பாடங்களையும் செய்து கொடுத்தார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை மேலூர் பள்ளிக்கு மாறுதல் செய்தது. அதற்கு பிறகும் மாணவருடன் ஆசிரியை தொடர்பிலிருந்ததையறிந்த பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கமும் செய்தது காரியாபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இந்த நிலையில் திடீரென அந்த மாணவர் மாயமானார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தன.
அந்த மாணவர் படித்த பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய பாத்திமாகனி (வயது40). இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பள்ளிக்கு பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளார்.
அதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருப்பதை அறிந்த காவல்துறை புதுச்சேரிக்குச் சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 நாட்களாக புதுச்சேரி பகுதியில் ஆசிரியை பாத்திமாகனியும், மாணவனும் அறை எடுத்து தங்கி இருந்ததும், மாணவனை கல்லூரியில் சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. ஆசிரியை பாத்திமாகனியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மாணவரை கல்லூரியில் சேர்க்கவே அழைத்து வந்ததாக ஆசிரியை தெரிவித்தார். இருப்பினும் பெற்றோருக்குத் தெரியாமல் மாணவரை அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது செய்யப்பட்டார். மாணவரை பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பினர்
கருத்துகள்