நாட்டின் கலை, கலாச்சாரம், வாழ்வியல் போன்றவற்றை முன்னிறுத்துவதில் ஆவணப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: திரைப்பட நடிகர் விஜய் ஆதிராஜ்
சென்னையில், மும்பை சர்வதேச திரைப்படவிழா 2024-ன் திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆதிராஜ் கருத்து
நாட்டின் கலை, கலாச்சாரம், வாழ்வியல், கட்டிடக் கலை போன்றவற்றை முன்னிறுத்துவதில் ஆவணப்படங்கள் முக்கியப்பங்கு வகிப்பதாக திரைப்பட நடிகர் விஜய் ஆதிராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (18,06.2024) 18-வது மும்பை சர்வதேச திரைப்படவிழா 2024-ன் முதல் சிறப்பு திரைப்படமாக திரையிடப்பட்ட, “பில்லி அண்டு மொல்லி – அன் ஒட்டர் லவ் ஸ்டோரி” திரைப்படம், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின், இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தில் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் ஆதிராஜ், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம், மத்திய கலாச்சாரத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவை ஆவணப்படங்களின் சர்வதேச சந்தைக்குப் போதிய நிதி ஒதுக்குகின்றன என்றார். இதனை திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், வணிக ரீதியிலான திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆவணப்படங்களும் வருவாய் அளிப்பவையாக உள்ளன என்றார்.
இந்த நிகழ்வில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு அண்ணாதுரை, திரைப்பட நடிகர் சுந்தர், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாகிகளான திரு பி ராமகிருஷ்ணன், திரு தங்கராஜ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழக ஆலோசகர் ரோகினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் மும்பை விழாவுடன் இணைந்து திரைப்படங்கள் திரையிடப்படுவது ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. கதை சொல்லல் கலையில் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து, பல்வேறு கலாச்சார காட்சிகளை ரசிகர்களுக்கு ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் மூலம் வழங்கி வருகிறது. நமது உலகில், புலனாய்வு இதழியல் முதல் தனிப்பட்ட மலரும் நினைவுகள் வரை, சிந்தனைகளை தூண்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்களின் துணிச்சலை திரைப்பட விழா எடுத்துக்காட்டுகிறது. அதே சமயம், அனிமேஷன் படைப்பாற்றல் மூலம் பாரம்பரிய கதை சொல்லல் திறனையும் திரைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு சிறந்த ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் திரைப்படங்களை அறிமுகம் செய்ய திரைப்பட விழா முனைந்துள்ளது. சென்னை, கொல்கத்தா, தில்லி, புனே ஆகிய நகரங்களில், சிறப்பு வாய்ந்த சிவப்புக் கம்பள முன்னோட்டம் மூலம் திரைப்படங்களை திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான சிவப்புக் கம்பள முன்னோட்டப் படங்களை சிறப்பாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், சென்னை நகர திரைப்பட ஆர்வலர்கள், மறக்க முடியாத திரை விருந்தை சுவைப்பதை எதிர்நோக்கியுள்ளனர்.
சென்னையில் திரையிடப்பட உள்ள திரைப்படங்களில், சர்வ்நிக் கவுர் இயக்கிய, “அகேன்ஸ்ட் தி டைடு”, ரோஜியர் காப்பியரின், “கிளாஸ்மை அன்ஃபுல்ஃபில்டு லைப், விக்னேஷ் கும்லாயின் “கர்ப்பரா”, ஹோமர் ஹர்மானின் “ஐ ஆம் நாட்” ஆகியவை சில குறிப்பிட்ட படங்களாகும். இவை தவிர அங்கிட் பொகுலாவின் “பெட்சால்”, சுபாங்கி ராஜன் சாவந்த் இயக்கிய “சகஸ்திரசூர்யா சாவர்கர்”, சுஹாஸ் சீதாராம் கர்னேகரின் “ஆத்வானித்ல்ய பால்குனா” ஆகிய படங்களும் திரையிடப்படும்.
சிறந்த படங்களைக் கொண்டாடும் 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா, அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்களின் படங்களையும் திரையிடுகிறது. இவற்றில் சர்வ்நிக் கவுர் இயக்கிய, “அகேன்ஸ்ட் தி டைடு”, நிதிஷா ஜெயின் ஷரண் இயக்கிய “தி கோல்டன் திரெட்”, மிலா துராஜிக் இயக்கிய “சினி கொரில்லாஸ்: சீன்ஸ் ஃப்ரம் தி லபுடோவிக் ரீல்ஸ்” ஆகிய படங்களும் இதில் அடக்கம். இதே போல அனிமேஷன் பிரிவில், டியன் ஜியாபெங்க் இயக்கிய ”டீப் சீ”, ஆவணப்படப் பிரிவில், சிமோனா கோர்னச்சியா, அன்னா ருஸ்ஸோ ஆகியோர் இயக்கிய “ஏஆர்எஃப்”, குறும்படப் பிரிவில் பெக்கா அஹாங்கரணி இயக்கிய “மை ஃபாதர்” ஆகியவையும் திரையிடப்படும்.
ஜூன் 15-ந் தேதி தொடங்கிய மும்பை சர்வதேச திரைப்பட விழா ஜூன் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.ஒரு விலங்கின் கவர்ச்சி திரைப்படத்தில் அதற்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது: வனவிலங்கு குறித்த திரைப்படத் தயாரிப்பாளர் அல்ஃபோன்ஸ் ராய்
ஒரு விலங்கின் கவர்ச்சி திரைப்படத்தில் அதற்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது என்று வனவிலங்கு குறித்த புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அல்ஃபோன்ஸ் ராய் தெரிவித்துள்ளார். 18-வது மும்பை திரைப்படவிழாவில் “வனப்பகுதியைக் கண்டறிதல்: இந்திய வனவிலங்குகள் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள்” என்பது பற்றிய பேருரையை அவர் நிகழ்த்தினார்.
சென்னையில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான திரு அல்ஃபோன்ஸ் ராய், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பார்கள், பறவைகள் மற்றும் சிறிய வகை உயிரினங்களை விட, புலி, சிங்கம், திமிங்கலம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்தத் துறையில் பணியாற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆர்வம் மிகவும் அவசியம என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் வளமாக இருப்பதால், வனவிலங்குகள் குறித்த திரைப்படத் தயாரிப்புக்கு இது மிகவும் சரியான இடம் என்று அவர் கூறினார்.
வனவிலங்குகள் பற்றிய திரைப்படத் தயாரிப்பின் போது, நெறிமுறைகள் மிகவும் அவசியம் என்று கூறிய திரு அல்ஃபோன்ஸ் ராய், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வனவிலங்குகளை படம் பிடிக்கலாம் என்றும், தங்களை காட்சிப்பதிவு செய்கிறார்கள் என்ற உணர்வு வனவிலங்குகளுக்கு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும என்றும் கூறினார்.
இயற்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்ள மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ராய், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம், சென்னை இயற்கை அறிவியல் சங்கம் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது ஓடிடி தளங்கள் இருப்பதால், புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களை சார்ந்து இல்லாமல், வன விலங்குகளை முதன்மைப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவர கூறினார். முதல்முறையாக புலிகள் குறித்து படம் எடுத்தபோது தாம் எதிர்கொண்ட சவால்களை தனிப்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.திரைப்படத் தயாரிப்பில் வளர்ந்து வரும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மும்பை சர்வதேசத் திரைப்பட விழா
மாணவப் பருவத்தில் திரைப்படத் தயாரிப்பார்களாக உருவாகி வருவோரின் திறமைகளை வெளிகொணர 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நல்ல வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள திரைப்படத் தயாரிப்புப் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் 40-க்கும் அதிகமான குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இதை தவிர, ஜெர்மனியில் உள்ள பேபெல்ஸ்பெர்கின் கொனார்ட் வுல்ஃப் திரைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. அனிமேஷன், கதைப்படம், ஆவணப்படம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள சத்தியஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், காட்சி அறிவியல் மற்றும் கலைகளுக்கான கே ஆர் நாராயணன் தேசிய கல்விக் கழகம் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
எம்.ஜி. தனுஷ்வர்தனன் இயக்கிய ஷார்ட் டேல், டாம்ஜோஸ் இயக்கிய த்ரி பீஸ் லைட், தனுஷ் ராஜ் இயக்கிய தி ஃபைனல் கட் ஆகியவை சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் குறுகிய கால திரைப்படங்களாகும்.
கருத்துகள்