ரூபாய்.21 கோடி மதிப்புள்ள 2095 கிராம் போதைப் பொருள் (கொகைன்) சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து சென்னை வந்த கானா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரிடம், சென்னை பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, அந்த பயணியின் காலணி மற்றும் பைகளில் பவுடர் வடிவிலான போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2095 கிராம் கொகைன் போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.21 கோடியாகும். இது தொடர்பாக அந்த பயணி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்