புவன் பஞ்சாயத் 4.0, அவசரகால நிர்வாகத்திற்கான தேசியத் தரவுத் தளம் 5.0 ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்.
புவன் பஞ்சாயத் 4.0, அவசரகால நிர்வாகத்திற்கான தேசியத் தரவுத் தளம் 5.0 ஆகிய இரண்டு புவிசார் போர்ட்டல்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவிஅறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் (28.06.2024) புதுதில்லியில் தொடங்கி வைப்பார். இதில் பஞ்சாயத்து ராஜ், புவிஅறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஜல்சக்தி, உள்துறை, விண்வெளித்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்த இரண்டு போர்ட்டல்களை உருவாக்கியுள்ளது. நிர்வாகம், நீடித்த வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்குத் தேவையான தரவுத் தளங்களை இவை வழங்கும்.
புவன் பஞ்சாயத்து புவிசார் போர்ட்டல் 4.0 என்பது கிராமப் பஞ்சாயத்து நிலையில், நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சிகளுக்குத் தேவையான தகவல்களை விண்வெளி மூலம், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தவும் உதவியாக இருக்கும்.
அவசரகால நிர்வாகத்திற்கான தேசியத் தரவுத் தளம் 5.0 என்பது உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மைக்கு உதவியாக இருக்கும்.
கருத்துகள்