சென்னை விமான நிலைய சுங்கத்துறை 8.04 கோடி ரூபாய் மதிப்பிலான 12.621 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றும் திரு முகமது பர்கத்துல்லாவிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தனது காலணிக்குள்ளும், தோல்பையிலும், பணியாளர் அறையிலும், 36 சிறிய பைகளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றைக் கொழும்பு செல்லும் மற்றொரு பயணியிடமிருந்து வாங்கியது தெரியவந்தது. இதனையடுதது, அது பறிமுதல் செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட 12.62 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தின் மதிப்பு ரூ. 8.04 கோடியாகும். இதையடுத்து இண்டிகோ விமானப் பணியாளரும், இலங்கையைச் சேர்ந்த திரு அப்துல்லா கோமு ஜல்ஜஹான் என்ற பயணியும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்