பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுப்பேற்றார்
"பிரதமர் மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் புரட்சிகர நிர்வாக சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, இவை இந்தப் பதவிக்காலத்திலும் தொடரும்" என்று அவர் கூறினார்
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். பின்னர் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் தொடர்ச்சியாகப் புரட்சிகர நிர்வாக சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன என்றும், இவை இந்த ஆட்சிக்காலத்திலும் தொடரும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தம்மீது மீண்டும் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பொறுப்பை தனக்கு வழங்கியதற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார். டாக்டர் சிங் 2014-ம் ஆண்டு முதல் இந்தத் துறைக்குப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக திரு அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றார்
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழைகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார். 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கான நேற்றைய அமைச்சரவை முடிவை மீண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசின் முதல் நாளில் அமைச்சரவை எடுத்த முதல் முடிவு ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களுக்கு அரசு தொடர்ந்து சேவை செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகப் பிரதமருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
திரு வைஷ்ணவை அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஊடகப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.மத்திய மின்துறை அமைச்சராக திரு மனோகர் லால் பொறுப்பேற்றார்
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு மனோகர் லால் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.
முன்னாள் மின்துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் அவரை அன்புடன் வரவேற்றார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சருக்கு மின்சார அமைச்சகத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நாட்டின் மின்சார விநியோக நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார்.
கருத்துகள்