சீக்கியப் பெண் சி ஐ எஸ் எப் வீரர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வான கங்கனா ரனாவத்தை அறைந்து ஏன்
முன்னணி நடிகை கங்கனா ரணாவத்,
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் மாண்டி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை தோற்கடித்து, 52.9 சதவீத ஓட்டுகளுடன் அவரது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
டில்லிக்கு செல்வதற்கு சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எப்- மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா கேவலமாக ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், அதனால் பெண் காவலர் கோபமடைந்து கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிகிறது. அதுகுறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர்
அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். ஒரு நடிகை என்பதை விட அவர் தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள நிலையில் அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பாஞ்சாப்பிலும், டெல்லியிலும்
போராடிய விவசாயிகளை தீவிரவாதிகளெனப் பேசியதற்காக சண்டிகர் விமான நிலையத்தில் சீக்கியப் பெண் சிஐஎஸ்எப் வீரர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வான கங்கனா ரனாவத்தை அறைந்து விட்டார்.
நடிகை கங்கனாவை ஆதரிப்பதா, 'இராணுவத்தினர் எல்லையில் கால்கடுக்க' என்று கதையாடல் செய்து தேசபக்தி பேச உதவும் இராணுவத்தினரை ஆதரிப்பதா என பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர் நடந்த சம்பவம் குறித்து கங்கனா ரணாவத் கூறுகையில், "நான் இப்போது நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் அந்தச் சம்பவம் நடந்தது.
நான் விமான நிலையத்தில் பயணிகளுக்கான சோதனை முடிந்த பின், செல்லும் போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடந்து செல்ல முயன்ற போது, திடீரென அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார். பின்பு என்னை ஆபாசமாகத் திட்டினார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டத்துக்காக இப்படி செய்தேன் என்று என்னிடம் கூறினார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு பெரும் கவலை அளிக்கிறது" எனக் கூறினார்.
ஒன்று மட்டும் உறுதி. சில தேசிய இனங்களை ஒடுக்குவது போல சீக்கிய இனத்தின் மீது கைவைத்து விட்டு அவ்வளவு எளிதில் தப்ப முடியாது என்ற உண்மையை தற்போது நாட்டில் உள்ள பலர் இரண்டாம் முறையாக உணரும் நிலையில்
பஞ்சாபில் தீவிரவாதம் தலை தூக்குகிறது என நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் நடிகை கங்கனா ரனாவத் கூறியதற்கு ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கங்கனா ரனாவத்தின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது. அரசியல் அழுத்தம் இல்லாமல் விசாரணை நடக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்