அமைச்சர்களாக ஜிதன் ராம் மாஞ்சி, ஷோபா கரண்ட்லாஜே, சிராக் பஸ்வான்,கஜேந்திர சிங் ஷெகாவாத் பொறுப்பேற்றனர்
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சராக திரு ஜிதன் ராம் மாஞ்சியும், இணையமைச்சராக திருமதி ஷோபா கரண்ட்லாஜேயும் பொறுப்பேற்றுக்கொண்டனர்
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சராக திரு ஜிதன் ராம் மாஞ்சி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 2014-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பீகார் முதலமைச்சராக இருந்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை இணையமைச்சராகத் திருமதி ஷோபா கரண்ட்லாஜே பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராகவும், உணவு பதப்படுத்துதல், தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் செயலாளரும், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் மத்திய அமைச்சரையும், இணையமைச்சரையும் வரவேற்றனர்.
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி, 2047 தொலைநோக்குத் திட்டத்தில் தன்னைச் சேர்த்ததற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மையமாக உள்ளடக்கிய தற்சார்பு இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாகத் தன்னைத் திகழச் செய்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகக் கூறினார்.மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக திரு சிராக் பஸ்வான் பொறுப்பேற்றார்
புதுதில்லியில் உள்ள பஞ்சஷீல் பவனில் இன்று திரு சிராக் பஸ்வான் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சக செயலாளர் திருமதி அனிதா பிரவீன், உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர். திரு சிராக் பாஸ்வான் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்தார். உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் பொறுப்பை ஒப்படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அமைச்சகத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வேன் என்று அவர் கூறினார். அமைச்சகத்தின் அனைத்து திட்டங்கள், எதிர்கால திட்டமிடல் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக திரு கஜேந்திர சிங் ஷெகாவாத் பொறுப்பேற்றுக்கொண்டார்
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக திரு கஜேந்திர சிங் ஷெகாவாத் இன்று பொறுப்பேற்றார். அவரை கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஷெகாவாத், நமது நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள துடிப்பு மிக்க இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இந்த வாய்ப்பை தமக்கு வழங்கியிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
காலனி ஆதிக்கத்தைக் கைவிட்டு, நமது புகழ்மிக்க கலாச்சார பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா என்பதில் இருந்து பாரத் என்பதற்கு மாற்றம் பெற மிகப்பெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சராக திருமதி ஷோபா கரண்ட்லாஜே பொறுப்பேற்றார்
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சராக திருமதி ஷோபா கரண்ட்லாஜே இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். இவர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் பொறுப்பையும் வகிக்கிறார்.
முந்தைய அரசில் திருமதி ஷோபா கரண்ட்லாஜே வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு பதனத்தொழில்கள் துறைகளின் இணையமைச்சராக இருந்தார்.
கருத்துகள்