சவுதி அரேபிய கடற்படை பயிற்சி வீரர்கள் கொச்சி கடற்படை தளத்தில் பயிற்சி பெறுகின்றனர்
சவுதி அரேபிய கடற்படையைச் சேர்ந்த கிங் ஃபஹத் கடற்படை அகாடமியின் 76 பயிற்சி வீரர்கள் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையின் பயிற்சிப் படைப்பிரிவில் பயிற்சி பெறுகின்றனர். 2024 ஜூன் 24 அன்று இந்தப் பயிற்சி தொடங்கி நான்கு வாரங்கள் நடைபெறுகிறது.
ஏற்கனவே 2023 மே - ஜூன் காலகட்டத்தில் இதேபோன்ற பயிற்சியை சவுதி அரேபிய கடற்படையின் முதல் தொகுதி வீரர்கள் கொச்சியில் பெற்றனர்.
நான்கு வாரகால பயிற்சித் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய கொச்சி கடற்படைத் தளத்தின் மூத்த அதிகாரி கேப்டன் அன்சுல் கிஷோர், இந்தப் பயிற்சித் திட்டம் அடிப்படை கடல்சார் நடவடிக்கைகள் முதல் மேம்பட்ட நிலை வரை கொண்டது என்றார். கடலியல் தொடர்பான நுணுக்கங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதிலும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
கருத்துகள்