ஏழு நாடுகளின் தூதர்கள் தங்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (31.05.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழு நாடுகளின் தூதர்கள் / ஹைகமிஷனர்கள் தங்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கினர். இவற்றை அவர் ஏற்றுக் கொண்டார். நியமனப் பத்திரங்களை வழங்கிய தூதர்கள் / ஹைகமிஷனர்கள் மற்றும் நாடுகளின் விவரம் வருமாறு:
திரு ஃபெர்னான்டோ சேவியர் புச்சேலி வர்காஸ், ஈக்வடார் குடியரசின் தூதர்
திருமதி லிண்டி எலிசபெத் காமரூன், பிரிட்டன் ஹைகமிஷனர்
திரு மேஷல் முஸ்தஃபா அல்ஷெமாலி, குவைத் நாட்டின் தூதர்
திரு பாட்ரிக் ஜான் ரட்டா, நியூசிலாந்தின் ஹைகமிஷனர்
திரு அல்சானே கோன்டே, கினியா குடியரசின் தூதர்
திரு ஜகநாத் சாமி, ஃபிஜி குடியரசின் ஹைகமிஷனர்
திரு ஸூ ஃபியாங், சீன மக்கள் குடியரசின் தூதர்
கருத்துகள்