ஜம்புத்தீவு பிரகடனம்
பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மூலோபாய மற்றும் தொலைநோக்கு ஆவணம், இந்த நாளில் - ஜூன் 16, 1801 அன்று தமிழ்நாட்டின் மாபெரும் போர்ப்படைத் தலைவர்களான சிவகங்கை சமஸ்தானத்தின் பேரரசி கௌரி வல்லப மேதகு இராணி வேலுநாச்சியார் தளபதி பிரதானி முடிசூடா மன்னர்களான மருது பாண்டியரால் பிரகடனம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னை கிண்டியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை ராஜ்பவனில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்கள் வெளியிட்ட ஜம்பு தீவு பிரகடனத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு பாராட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என்.ரவி, தேசத்துக்காக உயிரைக் காவு கொடுத்து பாடுபட்ட மருது சகோதரர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள். ஜாதித் தலைவர்களாக ஆக்கப்பட்டது”. தவறான செயல்
சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களை மறந்து அந்நியர்களாகப் பார்க்கிறோம் என்றார் ஆளுநர் திரு ஆர் என்.ரவி. "அதற்குப் பதிலாக, எங்களை அழித்தவர்களை நாங்கள் மகிமைப்படுத்துகிறோம், மேலும் சிலர் சுதந்திரம் எங்களுக்கு பரிசளிக்கப்பட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்."
80 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்து சிறப்புத் திட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மருது சகோதரர்களின் உறவினர் வழிவந்த வழித்தோன்றல்கள் மற்றும் பிரபல பேச்சாளர்களை ஆளுநர் கௌரவித்தார். மருது சகோதரர்களின் திருவுருவப் படத்துக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேராசிரியர் என்.எஸ்.சந்தோஷ் குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்; பாரத் கியானின் நிறுவனர்களான ஹரி மற்றும் ஹேமா ஹரி; P. செந்தில் குமார், பாஞ்சாலங்குறிச்சி போர் குறித்து எழுதியவர் ; பி.கோலப்பன், தி இந்துவின் மூத்த துணை ஆசிரியர்; மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் துறை இயக்குநர் கே.எஸ்.சர்வாணி ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகை, ஜம்புத்தீவு பிரகடன தினத்தை கொண்டாடியதுடன் தாயக சுதந்திரத்துக்காக உயிர் நீத்த எண்ணற்ற தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூர்ந்தது. இதையொட்டி மருது சகோதரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையின் முன்முயற்சியில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் 90க்கும் மேற்பட்ட ஆய்வறிஞர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் சுமார் 100 கற்கும் மேற்பட்ட அதிகம் உலகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் அதோடு பல வெளியிடப்பட்டன.
ஆய்வறிஞர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய பேராசிரியர்கள் அவர்களின் கடினமான பங்களிப்புகளுக்காக தமிழ்நாடு ஆளுநரால் பாராட்டப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்தவர்கள் மற்றும் மக்கள் சுதந்திரத்துக்காக முன்னெடுத்த யுத்தம் மற்றும் போராட்டங்களை ஆராய்ந்து அத்தகவல்களை வெளியிட்ட சில சிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களும் பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களை நாம் மறக்கக் கூடாது என்றும், நாம் அனுபவிக்கும் சுதந்திரம் நமது தியாகிகளின் ரத்தம் மற்றும் துன்பங்களிலிருந்து பிறந்தது என்றும் கூறினார். நமது துணிச்சல்மிகு முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நமது இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் விதமாகவும், நமது சுதந்திர இயக்கத்தின் உண்மையான வரலாற்றை பதிப்பிக்க வேண்டும் என்றும் ஆய்வறிஞர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
பிரிட்டிஷ் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சிராப்பள்ளியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சார்பில் உள்ள பல சமஸ்தானத்தின் கூட்டமைப்பு சார்பில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புத் தான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஒட்டப்பட்டது. அதன் சான்றாவணமாக: Tamilnadu A Real History- Rajayyan.K.-Ratna Publications, Trivandrum-2005. மற்றும். South Indian Rebellion,The first war of Indebendence-1800-1801 Rajayyan.K.-Rao and Raghavan, Mysore Publications, -1971 உள்ளது.
கருத்துகள்