நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் வாழ்த்து
மக்களவையின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவைத் தலைவரின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்திலிருந்து மக்களவை பெரிதும் பயனடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதிய பதிவில் கூறியிருப்பதாவது:
"மக்களவையின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவை நான் வாழ்த்த விரும்புகிறேன். அவரது நுண்ணறிவு, அனுபவம் ஆகியவற்றின் மூலம் மக்களவை பெரிதும் பயனடையும். எதிர்வரும் பதவிக்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்."அவசர நிலை குறித்த மக்களவைத் தலைவரின் கண்டனத்திற்கு பிரதமர் பாராட்டு
அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக மக்களவைத் தலைவரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"அவசர நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள மக்களவைத் தலைவர், அந்த நேரத்தில் நடந்த அத்துமீறல்களையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்தது ஓர் அற்புதமான செயலாகும்.
50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அரசியல் சாசனம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, பொதுமக்களின் கருத்து நசுக்கப்பட்ட போது, நிறுவனங்கள் அழிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும். அவசர நிலையின் போது நடந்த சம்பவங்கள் ஒரு சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆகும்.”
கருத்துகள்