இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
மத்தியில் கூட்டணி க
ட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று பழைய நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைய மண்டபத்தில் காலையில் நடந்தது.அதில் நரேந்திர மோடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்ததில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் புதிதாகந் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுகா கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன் மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்தனர். அதையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துகள்