விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் இராமருக்கும் அதே ஊர் இராமசாமிக்கும் கோவிலில் சிங்கச் சிலை வைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
இராமசாமி, அவரது மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார், காவல்துறை ஆய்வாளர் சத்ய ஷீலா (வயது 42) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இராமரை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராமசாமி மற்றும் அவரது மகன் இராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராம்குமாரும், சத்ய ஷீலாவும் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது பெங்களூரில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர். இந்த நிலையில், சத்யஷீலா மீது ஏராளமான புகார்கள் வந்ததால், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் துறை ரீதியாக விசாரணை நடத்தி, சத்யஷீலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் காவல்துறை ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. டிக் டாக் மூலம் இராம்குமாருக்கும், சத்ய ஷீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பெண் டிஎஸ்பி ஒருவருடன் இராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான், ராம்குமார், பெண் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலாவுடன் வாழ்வது தெரிந்துக் கொண்ட பெண் டிஎஸ்பி. பின் தன் காவலர்களை அனுப்பி, இருவரையும் காவல்துறை வேனில் ஏற்றி வரும்படி உத்தரவிட்டார்.
இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் இராம்குமாரின் செல்போனை மட்டும் பறிமுதல் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு இராம்குமார் இன்ஸ்பெக்டருடன் வசித்து வந்தார். சரியாக வேலைக்குச் செல்லாத பெண் ஆய்வாளர் , ராம்குமாருடன் சேர்ந்து கந்து வட்டித் தொழில் செய்து வந்தார். அதனால் அவர் மண்டபம் அகதிகள் முகாம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சில மாதங்களுக்கு முன், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய போது, 20க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்கரி நடத்திய நாச்சியப்பனை அழைத்து வந்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து, கைது செய்தார்.
அது பொய் வழக்கு எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு. விசாரணையில் அவர் மீதான வழக்கு பொய்யானது என்பது தெரிய வந்தது. அந்த வழக்கில் சத்யஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது சத்யஷீலா மீது மேலும் புகார்கள் உள்ளதா என ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றும் முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக சத்திய ஷீலா பணியாற்றியுள்ளார். அப்போது தேவகோட்டையில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தார். அங்கு வசித்தபோது தான் ராம்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளார். அதைத் தொடர்ந்து ராம்குமாரை தன்னுடனே அவர் தங்க வைத்தார். நாளடைவில் அது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் வரத் தொடங்கிய நிலையில் மற்றொரு ர திருப்பமாக ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு, மதுரையைச் சேர்ந்த பெண் காவல்துறை உயரதிகாரி ஒருவரும் லைக் கொடுத்து உள்ளார். அதிகாரியைப் பற்றி தெரிந்து கொண்டு, இராம்குமார் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இராம்குமாரின் தகவல்கள் வரம்பு மீறியதால் அவரைப் பற்றி விசாரித்த போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆய்வாளர் சத்தியஷீலாவுடன், ராம்குமார் வசித்து வந்தது தெரிந்ததைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இராம்குமாரை மதுரைக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர் ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றி நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்த தகவல் சத்திய ஷீலாவிற்கு தெரிய வந்ததனால் தனக்கு எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சத்திய ஷீலா தலைமறைவானார்.
விசாரணைக்குப் பின்னர் ராம்குமார் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கிடைத்த பின்னரே, மீண்டும் இருப்பிடத்திற்கு வந்துள்ளார்.
இதுபோன்று சத்திய ஷீலா மீதும் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் அலுவலக ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
பின்பு சத்தியஷீலா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சைபர்கிரைம் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புகார்களில் சிக்கி உள்ள ஆய்வாளர் சத்தியஷீலா, இரண்டு பணிகளில் நியமிக்கப்பட்டது காவலர்கள் மத்தியில் பரபரப்பாகவும் பேசப்பட்ட சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தன்னுடன் இருந்த இராம்குமாருடன், சென்றபோது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் சிக்கி சிறை சென்றிருப்பது காவல் துறை வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறின் போது ராமர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் துறை ஆய்வாளர் சத்திய ஷீலா (வயது 42)
, அவருடைய கள்ளக்காதலன் ராம்குமார் ( வயது 35) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராம்குமாருக்கு திருமணமாகவில்லை. சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் கொண்டவர், ரீல்ஸ் வீடியோக்கள், டிக்-டாக் என்று பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரது வீடியோ பிடித்து லைக் கொடுப்பவர்கள், பெண்களாக இருந்தால் அவர்களிடம் வம்படியாகச் சென்று பேசுவது ராம்குமாரின் வழக்கம். சிலர் அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளனர்
அவ்வாறு வீடியோவுக்கு லைக் கொடுத்து பேசத்தொடங்கியவர்களில் ஒருவர் தான் சத்தியஷீலா. முதலில் அவர் சாதாரண பெண் போலத்தான் பேசி இருக்கிறார். சில நாட்களில் அவர் காவல்துறை ஆய்வாளர் என்பதும், தனியாக வசிப்பதும் ராம்குமாருக்கு தெரியவந்ததால், அவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்
கருத்துகள்