ஹைட்ரஜன் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுக்காக மெத்தனால் மற்றும் பாராஃபார்மல்டீஹைடு இணைவில் ஹைட்ரஜன் தயாரிப்புக்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
மெத்தனால் மற்றும் பாராஃபார்மல்டீஹைடு கலவையில் இருந்து இதமான சூழலில் ஹைட்ரஜன் தயாரிப்புக்கான செயற்கை முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
வணிக ரீதியில் கிடைக்கின்ற நிக்கல் கிரியா ஊக்கிகளை பயன்படுத்தி மெத்தனால் மற்றும் பாராஃபார்மல்டீஹைடு கலவையில் இருந்து ஹைட்ரஜன் தயாரிப்புக்கான ஆய்வை திருப்பதியில் உள்ள ஐஐஎஸ்இஆர் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏகாம்பரம் பலராமன் தலைமையிலான ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சட்டப்பூர்வ அமைப்பான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏஎன்ஆர்ஃப்) உதவி செய்துள்ளது. ஹைட்ரஜன் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுக்கான இந்த ஆய்வு கேட்டலிசிஸ் சயின்ஸ் & டெக்னாலாஜி இதழில் வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால், ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இத்தகையை ஆய்வு பயனளிக்கும்.
கருத்துகள்