நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விரிவான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைப்பு
தேசிய தேர்வு முகமை, நீட் ( யுஜி) தேர்வை கடந்த மாதம் 5ந்தேதி ஓஎம்ஆர் (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடத்தியது. இதில்
முறைகேடுகள் / மோசடி / ஆள்மாறாட்டம் போன்றவை தொடர்பான சில வழக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்வு நடத்துவதில் வெளிப்படைத்தன்மை உள்ளதால், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், மறு ஆய்வுக்குப் பிறகு, விரிவான விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த விஷயத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள், அதனுடன் தொடர்புடைய அல்லது இடைநிகழ்வான விஷயங்களைத் தடுப்பதற்கும் பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.
தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.மேலும்
நீட்- முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களுக்காக தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட்- முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலிமை குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை, அதாவது 23.06.2024 அன்று நடைபெறவிருந்த நீட்- முதுநிலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு நடைமுறையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்