உத்தரப் பிரதேசம் லட்சுமணபுரி என்ற லக்னோ. ஹத்ராஸில் சாமியார் ஒருவர் பிரசங்கம் செய்த நிகழ்ச்சியில் பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வு.
இவர்களில் 40 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் பலரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஃபுல்லெரா கிராமத்தில் போலோ பாபா எனும் சாமியார் பிரசங்கம் செய்தார். மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரசங்கம் முடிவடைந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு பல நூறு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பெண்கள் உள்ளிட்ட 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்களை வைக்கவும் முடியாமல் அரசு மருத்துவமனைகள் கிணறும் நிலை. அத்துடன் 150க்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அந்த மருத்துவமனைகளில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
தேசத்தையே உலுக்கிய இச் சம்பவத்திற்கான காரணமாக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் நராயண சாகர் ஹரி யார் என்ற போலோ பாபா இவர் உத்த பிரதேச மாநிலத்தில் உள்ள எடா மாவட்டத்தின் படியாலி தாலுகாவில் பஹதூர் கிராமத்தைச் சேர்நதவர்.
உளவுத்துறையில் பணியாற்றியதாகக் கூறுமிவர் தனது 26 வயதில் வேலையை விட்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை வழங்கினார். நாடு முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உண்டு, வடக்கு உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிறார்கள்.
இதனிடையே அமைச்சர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் செல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்தார்.
கருத்துகள்