சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் 138 நட்சத்திர ஆமைகளைப் பறிமுதல் செய்தனர்
சென்னையிலிருந்து 10.07.2024 அன்று மலேஷியா செல்லவிருந்த ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்ததில், அவரிடமிருந்த 138 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். விமானம் புறப்படும் முனையத்தில் அவரது உடைமைகளை சோதனையிட்ட போது, அதில் நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆமைகள் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 பட்டியல் 1-ல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, அந்தப் பயணியைக் கைது செய்த சுங்கத்துறையினர் ஆலந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். உயிருடன் பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்