15 க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து மோசடி செய்த பெண் மற்றும் தரகர் உள்ளிட்ட இருவரைத் தேடும் காவல்துறை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைஞர் தாராபுரத்திலிருந்து உடுமலைப்பேட்டை சாலையில் அடுமனை மற்றும் கால்நடைத் தீவனங்களும் விற்பனை செய்து வரும் மகேஷ் அரவிந்த் ( 29 வயது) டைய நபருக்கு
திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால், உறவினர்கள் பெண் தேடியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சந்தியா (வயது 30) என்பவர் 'அம்பி டேட் தி தமிழ் வே' என்ற திருமண இணையதள அப்ளிகேஷன் மூலம் அந்தப் பெண்ணைச் சந்தித்தார்.பின்னர் இருவரும் பழனி அருகிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதை அந்த இளைஞரின் பெற்றோரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுக்குத் தேவையான நகைகள், புடவைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து கவனித்துக் கொண்டனர். திருமணமாகி 3 மாதங்களாகியும் சந்தியாவுக்கு வயது, தோற்றம் பொருந்தாததால் சந்தேகமடைந்து ஆதார் அட்டையைச் சரி பார்த்த போது சென்னையைச் சேர்ந்த அருன் என்ற வேறொருவர் கணவர் பெயராக இருப்பதும், வயதும் தெரியவந்தது.
மேலும் பெயர் மாற்றமாகப் பதிவு செய்துள்ளதையும் அறிந்ததனால் அதிர்ச்சியடைந்த இளைஞரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரித்ததில், ஆத்திரமடைந்தவர், மற்றும் குடும்பத்தினரை மிரட்டினார். அதனால் பதற்றமடைந்த அந்த நபர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று நடந்த சம்பவத்தை காவல் நிலையத்தில் தெரிவித்தார். விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு பத்தாண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த அருன் என்ற ஒருவருக்கும் நடந்த திருமணத்தில் குழந்தை இருப்பதும் தெரிந்தது. இவர் கரூரில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர், மதுரையில் மற்றொரு காவல்துறை சார்பு ஆய்வாளர் கார்த்திக், கரூரில் கருவூல அலுவலர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்ததாகத் தெரிகிறது. திருமணமான சில மாதங்களிலேயே சந்தியா கணவருடன் தகராறு செய்து நகை பணத்துடன் தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சந்தியாவின் திருமணப் பட்டியல் நீளமாகச் செல்கிறது. சந்தியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரைத் திருமணம் செய்து கொண்டு பல தொழிலதிபர்கள் தங்களிடம் இருந்த நகை பணத்தை தொலைத்து விட்டு அதைப் பற்றி வெளியே கூற முடியாமல் திணறி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. 15 க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியின் மோசடி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தியாவுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருன் என்ற ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாம். அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் அதன் பிறகு கரூரைச் சேர்ந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கம் மகன் பிரகாஷ், நில அளவை சர்வேயர் ராஜேஷ் உள்பட 15 பேர் வரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக சந்தியா மீது புகார். ஈரோட்டைச் சேர்ந்த சந்தியா என்ற பெண், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக விசாரித்த நிலையில். தமிழ்செல்வி, வயது 34, என்ற திருமண புரோக்கர் வாயிலாக பல ஊர்களில் திருமணத்துக்காக காத்திருப்பவர்களை அறிந்து, அவர்களை திருமணம் செய்து, பணம், நகையுடன் தலைமறைவாகியுள்ளனர்
இதுவரை இந்த மாதிரி 15 க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்தவர்கள் பலர் புகார் கொடுக்கவில்லை இந்த இருவரும் பிடிபடும் பட்சத்தில், முழுமையான விவரம் விசாரணை மூலம் தெரிய வருமாம்.
கருத்துகள்