தமிழ்நாட்டில் 18 காவல்துறை உயர் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தாம்பரம் காவல்துறை ஆணையராக அபின் தினேஷ் ஐபிஸ் நியமிக்கப்பட்டார்.
சென்னை தெற்கு கூடுதல் காவல்துறை ஆணையராக கண்ணம் ஐபிஎஸ் நியமனம். சென்னை வடக்கு கூடுதல் காவல்துறை ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம். வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.
தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்.
சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம்.
திருப்பூர் மாநகரக் காவல்துறை ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் நியமனம்.சேலம் மாநகர் காவல்துறை ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியா நியமனம்.
சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்.
ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்,
சென்னையில் காவல்துறைத் தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம். சிபிசிஐடி ஐஜியாக உள்ள டிஎஸ் அன்புவிடம் கூடுதல் பொறுப்பாக சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி பொறுப்பும் ஒப்படைப்பு.
கடலோரக் காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்கள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிற நிலையில் இன்று 18 ஐபிஎஸ் உயர் அலுவலர்களைப் பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கருத்துகள்