முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2023-24 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

2023-24 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

2023-ம் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக பிற நாடுகளை விட இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. உள்நாட்டு கட்டமைப்பு தொடர்பான சிக்கல்கள், நிலைத்தன்மை இல்லாத அரசியல்சார்ந்த முரண்பாடுகள் கடினமான நிதிக்கொள்கையின் தாக்கம் போன்றவை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்  கடுமையான மாறுபாடுகள் இருந்தன.

வெளியிலிருந்து வரும் பல்வேறு சவால்களுக்கு இடையே 2023-ம் நிதியாண்டில் இருந்த நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை 2024-ம் நிதியாண்டிலும் தொடரும். 2024-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி 8.2 %  ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நுண் பொருளாதார நிலைத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளியேயிருந்து வரும் சவால்களின் தாக்கம் குறைவது உறுதி செய்யப்படும்.


மூலதன செலவினங்களை அதிகரிக்கும் வகையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நாட்டில் மொத்த நிலையான முதலீட்டு கட்டமைப்பு 9% ஆக உள்ளது.

பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதிசார் செயல்பாடுகள், தனியார் முதலீடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும். வீட்டுவசதித் துறையில் குடியிருப்புகளுக்கான சந்தைக் குறியீடுகள், அத்துறையில் முதலீட்டுக்கான கட்டமைப்பை அதிகரிக்க செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.

உலக அளவில் பணவீக்க விகிதத்தின் அழுத்தம் தொடர்பான  பாதிப்புகள், விநியோக சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், பருவ மழையில் ஏற்படும் மாறுபாடுகள் போன்றவற்றை திறமையாக நிர்வகிக்கும் வகையில் நிதிசார் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன் விளைவாக 2023 ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்க விகிதம் 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக குறையும்.

பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டு விரிவாக்க நடவடிக்கைகள் இருந்த போதிலும், ரொக்க இருப்பு விகிதம் மேம்பட்டுள்ளது. வரி தொடர்பான நடைமுறை சீர்திருத்தங்கள், செலவின கட்டுப்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு போன்றவை நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.


பொருள்களுக்கான தேவை உலக அளவில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில், சேவைத் துறையின் ஏற்றுமதி பெருமளவில் அதனை ஈடுகட்டுவதாக இருந்தது. இதன் விளைவாக, கடந்த 2023-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% ஆக குறையும்.

பெருந்தொற்று காலத்திற்கு பின் நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மீண்டு வருகிறது. 2024-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-ம் நிதியாண்டில் இருந்ததை காட்டிலும் 20% கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சூழல், நிதிசார்ந்த சந்தை பருவநிலை தொடர்பான அபாயங்கள் போன்றவற்றை தவிர்த்து, 2025-ம் ஆண்டு நிதியாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள வங்கிகள், நிதித்துறையின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் அமையும்.

இரட்டை இலக்க மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான வங்கிக் கடனுதவிகள், பல்வேறு ஆண்டுகளாக இருந்து வந்த மொத்த, நிகர வராக்கடன்களின் மதிப்பை குறைத்தல், வங்கிகளின் சொத்து மேம்பாடு போன்ற சீரிய நடவடிக்கைகள் மூலம் வங்கித் துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

2024-ம் நிதியாண்டில் முதன்மை முதலீட்டு சந்தைகள் வாயிலாக 10.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். (2023-ம் நிதியாண்டின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த நிலை முதலீட்டைக் காட்டிலும் ஏறத்தாழ 29 சதவீதம் கூடுதலாகும்)

முதலீட்டு சந்தைகளில் இந்தியப் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. முதலீட்டுச் சந்தையின் வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உலக அளவில்

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வழிவகுத்துள்ளது.

இலக்கு அடிப்படையிலான அணுகுமுறை, சந்தை மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், கடைசிக்கோடி வரை விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு, நிதிசார்ந்த நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு போன்றவை அனைவரையும் உள்ளடக்கிய நிதி சார்ந்த உத்தியாகும்.

நாட்டின் நிதிசார் உள்ளடக்க உத்திகள், நேரடி பணபரிமாற்றத்தின் பயன்பாடுகளை வலியுறுத்துவதுடன் டிஜிட்டல் முறையில் ரூபே அட்டைகள் மற்றும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறது.

வர்த்தக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சந்தை இலக்குகளை எட்டும் வகையில் நிதிசார்ந்த விழிப்புணர்வை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவிலான கடனுதவிகள், தவறான விற்பனை, முகவரி தொடர்பான குறைபாடுகள் போன்றவற்றை நிதிசார்ந்த சுழற்சியை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நிதித் துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அரசும் முறைப்படுத்துநரும் கொள்கை மற்றும் முறைப்படுத்துவோருடன் கட்டுப்பாட்டுடனும் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது தேவைப்படுகிறது.

2022, 2023-ம் நிதியாண்டுகளில் கொவிட் பெருந்தொற்று, அரசியல் ரீதியான பதற்றங்கள், விநியோக நடைமுறையில் உள்ள இடர்ப்பாடுகள், உலக அளவில் பணவீக்க அழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணிகளாக அமைந்தன.

சர்வதேச அளவில் ஏற்பட்ட மோதல் போக்குகள், மோசமான வானிலை காரணமாக உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு போன்றவை நாட்டில் நுகர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் அதிகரிக்க காரணமாயின.

2024-ம் நிதியாண்டில் மத்திய அரசு வகுத்த கொள்கைகளும் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளும் பெருந்தொற்று காலத்திலிருந்து சில்லரை பணவீக்க விகிதத்தை 5.4% என்ற குறைவான அளவில் பராமரிக்க உதவியுள்ளது.

கொள்கை தலையீடுகள் மூலம் நேர்மறையான விளைவுகள்

2024-ம் நிதியாண்டில் உலக அளவில் எரிசக்தி விலை குறியீடு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு குறைத்தது. இதன் விளைவாக நடப்பு நிதியாண்டில் சில்லரை எரிசக்தி பணவீக்க விகிதம் குறைவான அளவில் நீடிக்கிறது.

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.200 வரை குறைக்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை குறைத்துள்ளது. இதன் விளைவாக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் சில்லரை பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு மார்ச் முதல் குறைந்துள்ளது.

உலக அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவிய போதிலும், நாட்டின் பொருளாதார கொள்கைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விலைவாசி கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

4 ஆண்டுகளில் குறைவான பணவீக்க விகிதம்

2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்க விகிதம் குறைந்துள்ளதையடுத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கான பணவீக்க விகிதமும் குறைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முக்கிய சேவை துறைகளில் பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளது.

சரக்குகளுக்கான பணவீக்க விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களின் விநியோகம் மேம்பட்டுள்ளதன் காரணமாக முக்கிய நுகர்வோர் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

2020 மற்றும் 2023-ம் நிதியாண்டுகளுக்கு இடையே இருந்த நுகர்வோர் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் குறைந்துள்ளது வரவேற்புக்குரிய மாற்றமாக கருதப்படுகிறது.

எவ்வித குழப்பமும் இல்லாத வகையில் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதாக நிதிசார்ந்த கொள்கைகள் அமைந்துள்ளன.

பணவீக்க விகிதம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகளை கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பணவீக்க விகிதம் 4 சதவீதமாக குறைந்துள்ளது.

எதிர்மறையான வானிலை காரணமாக உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள்

உலக அளவில் கடந்த 2 ஆண்டுகளில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம்  கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பயிர்ச் சேதங்கள் போன்ற பல்வேறு சவால்கள் உணவுப் பொருள்கள், வேளாண் விளைப் பொருட்களுக்கான   விலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.

இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் 2023-ம் நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024-ம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

2024-ம் நிதியாண்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மண்டலங்களில் பயிர்களுக்கு ஏற்பட்ட நோய், குறித்த காலத்திற்கு முன்னதாக பெய்த பருவ மழை, சரக்குப் போக்குவரத்து இடையூறுகள் போன்றவை காரணமாக தக்காளி விலை அதிகரித்தது.

ராகி பருவத்தில் கடைசி அறுவடை காலத்தில் பெய்த பருவ மழை வெங்காய விலை அதிகரிக்கவும், அதன் தரம் குறையவும் காரணமாக அமைந்தன.

கரீஃப் பருவத்தில் ஏற்பட்ட வறட்சியால் தாமதமான வெங்காய  நடவுப் பணிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளால் காரணமாக பிற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய நேரிட்டது.

எனினும் மத்திய அரசு மேற்கொண்ட உணவுப் பொருள் கையிருப்பு மேலாண்மை, வெளிச்சந்தை நடவடிக்கைகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியம், வர்த்தக கொள்கைகள் உள்ளிட்ட சரியான நிர்வாக நடவடிக்கைகள் உணவுப் பொருள் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த உதவின.

மாநிலங்களில் நிலவிய உயர் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில், கிராமப்புறத்திற்கும், நகர்ப்புறத்திற்கும் இடையிலான பணவீக்க விகித இடைவெளியை சரி செய்யும் வகையில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2024-ம் நிதியாண்டில் பெரும்பாலான மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

மொத்தமுள்ள 36 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 29-ல் பணவீக்க விகிதம் 6 சதவீதமாக பதிவாகி உள்ளது.

இது அகில இந்திய அளவில் கடந்த 2023-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சில்லரை பணவீக்கத்தை காட்டிலும் குறைவாகும்.

மாநிலங்களில் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு, கிராமப்புறங்களிலும் பணவீக்க விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

மாநிலங்களுக்கு இடையிலான பணவீக்க விகித வேறுபாடுகள் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் அதிகரிக்க காரணமாக இருந்தது.

கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் இடையிலான பணவீக்க விகித இடைவெளி அதிகரிப்பதற்கு மாநிலங்களின் ஒட்டு மொத்த பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது காரணமாக அமைந்தது.

எனினும் குறுகிய கால பணவீக்க விகிதம் சாதகமாக இருந்தபோதிலும் நீண்ட கால அடிப்படையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கைகள் அவசியமாகின்றன.

இந்நிலையில், குறித்த காலத்தில் பெய்யும் இயல்பான பருவ மழை, கொள்கைகளில் தாக்கம் ஏற்படுத்தாத சூழல் போன்றவற்றால் 2025-ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 4.5 சதவீதமாகவும், 2026-ம் நிதியாண்டில் 4.1 சதவீதமாகவும் குறையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

உலக அளவில் பொருட்களுக்கான விலைவாசி 2024 மற்றும் 25-ம் ஆண்டுகளில் குறையக் கூடும் என்று உலக வங்கி கணித்துள்ள நிலையில், எரிசக்தி, உணவுப் பொருள் மற்றும் உரங்களுக்கான விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இது நாட்டின் உள்நாட்டு பணவீக்க விகிதத்தை குறைப்பதற்கு உதவும்.

எனினும் நீண்ட கால அடிப்படையில் விலைவாசி நிலைத்தன்மையை எட்டுவதற்கு தேவையான தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு நவீன கிடங்குகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள், விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளாக மதிப்பிடப்படுகின்றன.

விலை கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல், சந்தை குறித்த ஆய்வுகள், முக்கியத்துவம் சார்ந்த இனங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவை மத்திய கால, நீண்ட கால பணவீக்க விகிதத்தை சரியான அளவில் நிர்வகிக்க உதவும்.

பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இறக்குமதி சார்ந்த நிலையை பெருமளவிற்கு குறைக்க இத்தகைய நடவடிக்கைகள் பயன் தரும்.

நலன் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இதில் அதிகாரமளித்தல், அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு  பொது அனுமதி, செயல் திறன், செலவு குறைப்பு, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துதல், மக்கள் சமூகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடிப்படை கல்வியிலிருந்து 3-ம் வகுப்பு வரை தேர்ச்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து உணவுடன் கூடிய கல்வி திட்டத்தின் மூலம் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் அங்கன்வாடி மையங்களில் தரமான மழலையர் பள்ளிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் மக்களின் உயிர்களை காப்பதுடன், அவர்களின் கடன் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதுவரை 34.7 கோடி எண்ணிக்கைக்கும் கூடுதலான ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் 7.37 கோடி பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த மருத்துவ செலவு காரணமாக ஏழை மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவ  செலவு 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு  சேமிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ செலவிலும், சிகிச்சை முறைகளிலும்  உள்ள குறைபாடுகளை களைவது மூலம் மன நலனை காப்பதுடன், பொருளாதார ரீதியிலும் பயனடையச் செய்கிறது.

குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் அதிக அளவிலான அலைபேசி மற்றும் இணைய தள பயன்பாடுகளிலிருந்து மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெண்கள் தலைமையிலான சமூக பொருளாதார, அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 89 மில்லியன் பெண்கள் 8.3 மில்லியன் சுய உதவி குழுக்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துதல், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் சமூக சீர்கேடுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரமான வாழ்க்கைக்கான சிறந்த திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சுய உதவிகுழுக்கள் வாயிலாக சமூக மூலதன நிலைபாடுகள், சந்தைப் படுத்துதல், மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த உதவிகளும் வழங்கப்படுகின்றன.

கிராமப்புற இடர்பாடுகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தேவைகளை உண்மையான  குறியீடுகளாக கருதாமல் மாநில அளவில் செயல்படும்  நிறுவனங்களில் திறன் மற்றும் குறைந்தபட்ச ஊதிய வேறுபாடுகளை களைவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் தொழிலாளர் வேலை வாய்ப்பு குறியீடுகள் மேம்பட்டுள்ளன.

2022-23-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் 3.2 சதவீதம் வரை குறைந்துள்ளது

மக்கள் தொகைக்கும், பாலின விகிதத்திற்கும் ஏற்ப இளைஞர்களும், பெண்களின் எண்ணிக்கையும் வேலைவாய்ப்பில் அதிகரித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சந்தாதாரர்களாக இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இது வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பொருளாதார நடவடிக்கைகளும், தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகளும் நலவாழ்விற்கான முக்கிய கருவியாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பமும் தொழிலாளர்களிடையே சமநிலையை பேணுவதும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொறுப்புணர்வை அதிகரித்துள்ளன.

தரமான, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வேளாண்மை மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்புக்கும் தொழிலாளர் நலன்களுக்கும் மத்திய அரசு முன்னுரி்மை அளித்து வருகிறது.

மத்திய அரசின் முன்னோடித் திட்டமான திறன் இந்தியா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பணிச்சூழலில் நிலப்பயன்பாடு, கட்டுமான வரையறைகள், பணி நேரத்திற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கு தீர்வு காண்பது வேலை வாய்ப்பை அதிகரிக்க வகை செய்கிறது.

அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியை அளிப்பதில் பொதுத்துறை முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2014-ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 11.7 கிலோ மீட்டர்  என்றிருந்த நிலையில் 2024-ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 34 கிலோ மீட்டர் என 3 மடங்காக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய ரயில் வழித்தடங்கள், இருப்புப்பாதை மாற்றியமைத்தல், இரட்டை வழித்தடம் உள்ளிட்ட பணிகளுடன் ரயில்வேயில் முதலீ்ட்டு செலவினம் 77 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் 62 மில்லியன் விமானப் பயணிகளைக் கையாளும் வகையில் ஒட்டு மொத்த பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் 21 விமான நிலையங்களில் புதிய முனையங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்தில் உலக வங்கியின் சரக்கு போக்குவரத்து செயல்பாடுகளுக்கான குறியீடு பட்டியலில் கடந்த 2014-ம் ஆண்டில் 44-வது இடத்திலிருந்து 2023-ம் ஆண்டில் 22-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.

நாட்டின் தூய்மை எரிசக்தித் துறையில் 2014 முதல் 2023-ம் ஆண்டு வரை 8.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

உஜாலா திட்டத்தின் அமலாக்கம் காரணமாக ஆண்டொன்றுக்கு 48.42 பில்லியன் கிலோ வாட் எரிசக்தி சேமிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம், 39.30 மில்லியன் டன்களாக குறைக்கப்பட்டதன் காரணமாக ஆண்டொன்றுக்கு கரியமில வாயுவின் வெளியேற்றம் குறைந்துள்ளது.

இதன் மூலம் நுகர்வோர் ஆண்டொன்றுக்கு மின்சார செலவில் 19,335 கோடி ரூபாயை சேமிக்க முடிகிறது.

945 கிலோ மீட்டர் தொலைவிற்கான மெட்ரோ ரயில் சேவை அல்லது மண்டல விரைவு போக்குவரத்துச் சேவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

27 நகரங்களில் 939 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2024-ம் நிதியாண்டில் 86 கிலோ மீட்டர் தொலைவிற்கான மெட்ரோ ரயில் சேவை அல்லது மண்டல விரைவுப் போக்குவரத்து சேவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 14.89 கோடி எண்ணிக்கைக்கும் கூடுதலான கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (76.12 சதவீதம்)

18 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், 9 வழிகாட்டு செயற்கைக் கோள்கள், 5 அறிவியல் ரீதியிலான செயற்கைக் கோள்கள், 3 வானிலை தகவல்களுக்கான செயற்கைக் கோள்கள், 20 புவி ஆய்வு செயற்கைக் கோள்கள் உட்பட மொத்தம் 55 விண்வெளி சொத்துக்கள் இந்தியாவின் வசம் உள்ளன.

2022-ம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டில் உள்ள மொத்த அலைபேசி கோபுரங்களின் எண்ணிக்கை 8.02 லட்சமாக இருந்தது.

இதில் அடிப்படை தகவல் தொடர்பு வசதிகளை வழங்கும் நிலையங்கள் 29.37 லட்சமாகவும், 5-ம் தலைமுறை தகவல் தொடர்பு சேவையை வழங்கும் நிலையங்கள் 4.5 லட்சமாகவும் இருந்தன.

டிஜிட்டல் லாக்கர் தளத்தில் 26.28 கோடி எண்ணிக்கையிலான பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். அதில் 674 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கேலோ இந்தியா திட்டம்: இத்திட்டத்தின் கீழ் 2024-ம் நிதியாண்டில் வசதிகளை ஏற்படுத்துவதற்காக புதிதாக 38 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 58 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தியாவின் உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் தலைமையில் புதிய ஆதாரங்கள் மூலம் உயர் அளவிலான தனியார் துறை, நிதிசார் நடவடிக்கைகளும், முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

இது தரமான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும். இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்கு கொள்கைகள் வகுப்பது மட்டுமின்றி நிறுவனங்களின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது.

இதே போல் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் சரிவிகித அளவில் பங்காற்ற வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர்

பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், எங்களின் அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வரும் வேளையில், அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான துறைகளையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.”பொருளாதார ஆய்வு 2024 முதன்முறையாக பொருளாதார மட்டத்தில் மனநலம் குறித்து எடுத்துரைக்கிறது

கணிசமான உற்பத்தித்திறன் இழப்புகளுடன் தொடர்புடைய மனநலக் கோளாறுகள்

மனநலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றன

முதன்முறையாக, 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி. இன்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன், மனநலம், அதன் முக்கியத்துவம் மற்றும் கொள்கைப் பரிந்துரைகளில் உள்ள தாக்கங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

மன ஆரோக்கியத்தின் தேசிய பரவல்

தனிநபர் மற்றும் தேசிய வளர்ச்சியில் மனநலம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்கி என்பதை ஒப்புக்கொண்டு, தேசிய மனநல ஆய்வு (NMHS) 2015-16 இன் படி, இந்தியாவில் 10.6% பெரியவர்கள் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மனநல கோளாறுகளுக்கான சிகிச்சை இடைவெளி 70 க்கு இடையில் இருந்தது என்று கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. வெவ்வேறு கோளாறுகளுக்கு % மற்றும் 92%. மேலும், கிராமப்புறப் பகுதிகள் (6.9%) மற்றும் நகர்ப்புற மெட்ரோ அல்லாத பகுதிகள் (4.3%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மெட்ரோ பகுதிகளில் (13.5%) மனநோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. NCERT இன் பள்ளி மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்த இளம் பருவத்தினரிடையே மோசமான மன ஆரோக்கியம் அதிகரித்து வருவதை இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது, 11% மாணவர்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், 14% தீவிர உணர்ச்சிகளை உணர்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43% பேர் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கின்றனர்.

பொருளாதாரத்தின் லென்ஸ் மூலம் மனநலச் சிக்கல்கள்

ஒட்டுமொத்த பொருளாதார மட்டத்தில், மனநலக் கோளாறுகள், பணிக்கு வராமல் இருப்பது, உற்பத்தித்திறன் குறைதல், இயலாமை, அதிகரித்த சுகாதாரச் செலவுகள் போன்றவற்றால் ஏற்படும் குறிப்பிடத்தக்க உற்பத்தி இழப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. நிலைமைகள், நிதி உறுதியற்ற தன்மை, மற்றும் மேல்நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமை, இவை உயர்ந்த உளவியல் துயரத்திற்கு பங்களிக்கின்றன.

ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை அம்சமாக மனநலத்தை அங்கீகரித்து, இது தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை கணக்கெடுப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது:

தேசிய மனநலத் திட்டம் : இந்தத் திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ், 1.73 லட்சத்துக்கும் அதிகமான துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற PHCகள் மற்றும் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மனநலச் சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நேஷனல் டெலி மென்டல் ஹெல்த் திட்டம்: 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பயிற்சி பெற்ற 1600 ஆலோசகர்களுடன், 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 53 டெலி மனஸ் செல்கள் அமைக்கப்பட்டு, 31 மார்ச் 2024 நிலவரப்படி அக்டோபர் 2022 முதல் 8.07 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் கையாளப்பட்டன.

மனநலப் பணியாளர்கள் அதிகரிப்பு: முதுகலை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க 25 சிறப்பு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள்/நிறுவனங்களுக்கு 47 முதுகலை துறைகளை வலுப்படுத்த ஆதரவு அளிக்கப்பட்டது, 22 எய்ம்ஸ்களுக்கு வழங்கப்படும் மனநலச் சேவைகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கும் மூன்று டிஜிட்டல் அகாடமிகள் பொது சுகாதார மருத்துவ மற்றும் துணை மருத்துவ வல்லுநர்கள் அமைக்கப்பட்டது.

ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்ய காரியக்ரம் : இளம் பருவத்தினருக்கு ஏற்ற சுகாதார மருத்துவ மனைகள் (AFHC) மற்றும் சக கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன.

தேசிய முன்முயற்சிகளுக்கு மேலதிகமாக, மாநில அளவில் செயல்படுத்தப்பட்ட தனித்துவமான, சுயாதீனமான முயற்சிகளையும் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. இந்த மாநில அளவிலான முன்முயற்சிகள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மனநலம் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்வதில் தேசிய முயற்சிகளை நிறைவு செய்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

மனநலம் குறித்த கொள்கைப் பரிந்துரைகள்

நிலத்தடியில் மனநலப் பராமரிப்பில் செய்யப்பட்ட மேம்பாடுகளை விரைவுபடுத்தவும், தற்போதுள்ள திட்டங்களில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து அவற்றின் செயல்திறனை அதிகரிக்கவும் சரியான முறையில் செயல்படுத்துவது குறித்து கணக்கெடுப்பு வலியுறுத்துகிறது. முக்கியமான கொள்கை பரிந்துரைகளில் பின்வருவன அடங்கும்:

மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்குதல், 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 0.75 மனநல மருத்துவர்களாக இருந்து ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 3 என்ற WHO விதிமுறைக்கு

மனநலப் பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் பயனர்களுடன் இணைந்து சிறப்பான மையங்களின் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்கி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது.

தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் பரந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயனர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதன் மூலம் திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல்.

சக ஆதரவு நெட்வொர்க்குகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூகம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டங்களை வளர்ப்பது மனநலக் கோளாறுகளின் களங்கத்தை நீக்கி, சொந்த உணர்வை வளர்க்க உதவும்.

எதிர்காலக் கொள்கைகளை மேம்படுத்த, முன்னேற்றத்தின் பகுதிகளைக் கண்டறிவதில் உதவ, முயற்சிகளை அதிகரிக்கவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், வளங்களைப் பயன்படுத்தவும் NGOக்களுடன் கூட்டுசேர்தல்.

முடிவெடுத்தல், சேவைத் திட்டமிடல் மற்றும் வக்கீல் முயற்சிகளில் மனநலப் பிரச்சனைகளுடன் தனிப்பட்ட அனுபவமுள்ள நபர்களை ஈடுபடுத்துவது மனநலப் பாதுகாப்புச் சேவைகளின் நபர்-மையம் மற்றும் மீட்பு நோக்குநிலையை அதிகரிக்கும்.

முன்பள்ளி, அங்கன்வாடி மட்டத்தில் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

அரசு மற்றும் தனியார் துறை முழுவதும் மனநலச் சேவைகளுக்கான வழிகாட்டுதல்களின் தரப்படுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வயதுக்கு ஏற்ற மனநலப் பாடத்திட்டத்தை உருவாக்குதல், பள்ளிகளில் ஆரம்பகால தலையீடு மற்றும் நேர்மறையான மொழியை ஊக்குவித்தல், சமூக அளவிலான தொடர்புகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளில் மனநலத் தலையீடுகளை ஒருங்கிணைப்பதற்கான பயனுள்ள வழிகள்.

மன ஆரோக்கியம் மற்றும் களங்கத்தை உடைத்தல் என்ற தலைப்பைக் கையாள்வதில் கீழ்மட்ட, முழு சமூக அணுகுமுறை.

பொது சுகாதார அதிகாரிகளுக்கு, தனிப்பட்ட மட்டத்தில் உள்ள அடிப்படை தயக்கத்தை அங்கீகரித்து நிவர்த்தி செய்வதன் மூலம் மன ஆரோக்கியத்தை கையாளுதல்

விவசாயத்துறை வளர்ச்சிக்கென 5 அம்ச கொள்கை

1960 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உணவு பாதுகாப்பு என்ற அடிப்படை நிலையிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற நிலைக்கு முன்னேற்றம் பெற வேண்டிய தருணம் இது என்று பொருாதார ஆய்வறி்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை உணவு தேவையை காட்டிலும் பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பழ வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதையும் அது சுட்டிக்காட்டுகிறது. உணவுப் பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் துறைக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும், இயற்கை ஆதாரங்களுடன் கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.


விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு வேளாண் விளைப் பொருட்களுக்கான சந்தை செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் 5 அம்ச கொள்கைகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...