தேசிய கோபால் ரத்னா விருது -2024- க்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை, 2024-ம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதுக்கான பரிந்துரைகளை வரவேற்கிறது. தேசிய விருதின் இணையப்பக்கமான https://awards.gov.in மூலம் 15.07.2024 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31.08.2024 கடைசி தேதி ஆகும்.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், செயற்கை கருவூட்டல் வல்லுநர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கும் நோக்குடன், இத்துறை தேசிய கோபால் ரத்னா விருதினை வழங்குகிறது.
தேசிய கோபால் ரத்னாவிருது 2024 என்பது சான்றிதழ், ரொக்கப்பரிசு, நினைவுப்பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
முதல் இடத்திற்கு ரூ.5 லட்சமும்
2-வது இடத்திற்கு ரூ.3 லட்சமும்
3-வது இடத்திற்கு ரூ.2 லட்சமும்
வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (ஏஐடி) பிரிவில், மூன்று தரவரிசைகளுக்கும் தகுதிச்சான்றிதழும், நினைவுப் பரிசும் மட்டுமே வழங்கப்படும்.
தேசிய பால் தினத்தை முன்னிட்டு 26.11.2024 அன்று இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி, பரிந்துரை ஆகியவை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, https://awards.gov.in , https://dahd.nic.in என்ற இணைய தளங்களைப் பார்வையிடலாம்.
கருத்துகள்