நான்கு நாடுகளின் தூதர்கள், தங்களது பணி நியமன ஆணைகளைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்
தெற்கு சூடான் குடியரசு, ஜிம்பாப்வே, ஸ்பெயின், அர்ஜென்டினா குடியரசு நாட்டின் தூதர்களின் பணி நியமன ஆணைகளைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றுக் கொண்டார். பணி நியமன ஆணைகளை வழங்கிய தூதர்கள்:
தெற்கு சூடான் குடியரசு தூதர் திரு லுமும்பா மக்லேலே நியாஜோக்,
ஜிம்பாப்வே குடியரசு தூதர் திருமதி ஸ்டெல்லா என்கோமோ,
ஸ்பெயின் நாட்டுத் தூதர் திரு ஜுவான் அன்டோனியோ மார்ச் புஜோல்,
அர்ஜென்டினா குடியரசுத் தூதர் திரு மரியானோ அகஸ்டின் காசினோ
கருத்துகள்