தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் “மாநில நிதி தணிக்கை அறிக்கை”, தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநருக்கு அளிக்க அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)- வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்படி 2023 மார்ச் 31-ல் முடிந்த நிதியாண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் தமிழ்நாடு அரசின் நிதித் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக 2024 ஜூலை 10 அன்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதன்மை தலைமை கணக்காளர் திரு டி. ஜெய்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்