தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி என் கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், தன்னாட்சி வாரியங்களுக்கும் பல்வேறு நபர்களை அமைச்சரவையின் நியமனக்குழு நியமித்துள்ளது. இந்த நியமனங்கள் 4 ஆண்டு காலத்திற்கு, நியமிக்கப்பட்டவர் 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
நியமிக்கப்பட்டவர்களின் விவரம்:
மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவரான டாக்டர் பி என் கங்காதர் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரைத்திருநாள் மருத்துவ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் சஞ்சய் பிகாரி, மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் (புற்றுநோயியல்) டாக்டர் அனில் டி குரூஸ், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திர அச்யுத் பாட்வே, இளைநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் 2 ஆண்டு காலத்திற்கு, 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
கருத்துகள்