பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட,
பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியிலிருந்து நீக்கியது மாநிலத் தலைமைகொலை செய்தவர்களுடன்அஞ்சலையுடனான அத்தனை தொடர்புகளும் இப்போது தீவிர விசாரணை வளையத்தில் உள்ளனவாம். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டதில் இன்று புதிதாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷும் அதிமுக நிர்வாகி மலர்க்கொடியும் உண்டு.
ஆற்காடு சுரேஷின் 'துணைவி' பாஜக நிர்வாகியான புளியந்தோப்பு 'கஞ்சா' அஞ்சலை
தான் முக்கியக் குற்றவாளி என்கின்ற நிலையில் விசாரணை தொடர்வதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து வரும் தகவல். பழிக்கு பழியாக படுகொலையான ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகள் குறித்து விசாரித்து வருவதாகவும். அதில் சென்னை வியாசர்பாடி ரௌடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதமிருந்து வந்ததாகவும்.
ஆம்ஸ்ட்ராங் மொபைல் போனில் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகு வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரௌடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கைத் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
ரௌடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கட்டுமான நிறுவன அதிபர் ஜெயபிரகாஷ், (வயது 30), என்பவரைக் கடந்தாண்டு, மாமூல் கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும். அப்போது, ஜெயபிரகாஷுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் செயல்பட்டுள்ளது, ரௌடி நாகேந்திரனுக்குத் தெரியவந்ததால். மகனுடன் மோதும் ஆம்ஸ்ட்ராங்கை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளதாகவும்.
அதுபற்றி ரௌடி நாகேந்திரனிடம் விசாரிக்க உள்ளதாகவும். அத்துடன், ஆம்ஸ்ட்ராங்கைக் பழிக்கு பழியாக கொலை செய்த கூலிப்படையினருக்கு, பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து, 50 லட்சம் ரூபாய் வரையிலும் பரிவர்த்தனை நடந்துள்ளது குறித்தும் விசாரித்து வருவதாகத் தகவல் தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய, ரௌடி தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவியும், அவரது உதவியாளரும் தற்போது கைது செய்யப்பட்டனர். ரௌடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், திருநின்றவூரைச் சேர்ந்த வழக்குறைஞர் அருள், (வயது 33), என்பவருமுள்ளார்.
பொன்னை பாலுவின் மைத்துனரான அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும், அவரின் மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் வசிக்கும் அ.தி.மு.க., நிர்வாகி மலர்க்கொடி என்பவருடன், அருள் அடிக்கடி பேசி வந்ததும், இருவருக்கும் லட்சக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததும் காவல்துறையினருக்குத் தற்போது தெரிய வந்ததுள்ளது, மலர்க்கொடி மற்றும் அவரின் உதவியாளர் ஹரிஹரன் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பதும், கூலிப்படையினருக்கு, மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் வரை கைமாறியதும் தெரியவந்தது. இருவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர். தோட்டம் சேகர் என அழைக்கப்படுபவர், சென்னையில் மிகப்பெரிய ரௌடியாக வலம் வந்தார். அ.தி.மு.க.,வின் பிரசாரப் பாடகராகவுமிருந்தார். அவர், 2001 ஆம் ஆண்டில், மயிலாப்பூர் சிவகுமாரால் கொல்லப்பட்டார்.
தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் இந்த மலர்க்கொடி; சட்டப் படிப்பை முடித்துள்ளார். இவர்களுக்கு, அழகர் ராஜா என்ற மகனும் உள்ளார். திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள அருளுடன் நெருங்கிய தொடர்பில் இவர் இருந்து, சதித் திட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தி.மு.க.,வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசனின் மகனான சதீஷ் கைது தற்போது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்போது நீக்கம் செய்யப்பட்டார்,
அந்த கட்சியில் இருந்ததே சிலர் தான் அதிலும் ஒருவன் தற்போது நீக்கிய நிலையில் மிஞ்சும் நபர்கள் யாரோ என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதம், ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு தொடர்பாக பெண் வழக்குரைஞர் மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரையும் தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துவதாகத் தகவல். தலைவர்கள் என்பவர்கள் முதலில் வழக்கு இல்லாமல் இருங்க வேண்டும்
திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, எல்லாம் செய்து விட்டு கட்சி ஆரம்பித்து விடுவதும், இவர்களை ஏதாவது ஒரு கட்சியில் சேர்ப்பதும் இவர்கள் செய்யும் தவறுகளை ஊக்கப் படுத்துதல் போலாகும் என்பதை அந்தக் கட்சியின் தற்போது உள்ள தலைவர்கள் உணர்ந்தாகத் தெரியவில்லை,
அரசு மீது பழியைப் போட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வரும் பலர் ஆம்ஸ்ட்ராங் எதிரிகள் குறித்து விசாரித்து வரும் போது, அவர்கள் இதுவரை செய்த கட்டப்பஞ்சாயத்துக்கள் கணக்கில் அடங்காது என்பதும் தற்போது தான் பலவகையில் செய்திகளாக வருகிறது, திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள அருளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து இவர் சதி திட்டத்தில் ஈடுபட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. தி.மு.க.,வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசனின் மகனான சதீஷ் என்பவனும் கைது செய்யப்பட்டான். அதோடு பஞ்சாயத்து முடியவில்லை அறநிலையத்துறை அமைச்சரின் மகள் வேற்று ஜாதி மணமகனைத் திருமணம் செய்த விவகாரங்களில் படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் இறுதிவரை மணமக்களுக்கு ஆதரவாக இருந்த முன் விரோதம் உள்ளது என்பதும் தான் தற்போது உள்ள கள நிலவரம். இந்தக் கொலை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் இதுவரை அடைக்கப்பட்டனர். கைதான இந்த 15 பேரையும் 5 நாட்கள் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரிக்கக் கடந்த வாரம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் இந்தக்கொலைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்று காவல்துறை வழக்குரைஞர் அருள் என்பவரைக் கைது செய்தனர். அவரை கொலை நடந்தது எப்படி என்பதற்கான சாட்சியம் அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது தப்ப முயன்றதாகக் கூறி காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இந்தக் கொலைக்குப் பின்புலமாக ஒரு தொழிலதிபர் இருப்பதாக மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்
ஒரு தகவலைக் கூறியுள்ளதில். இந்தக் கொலை சதி பின்புலம் பற்றி ஒரு யூடியூப் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில். "சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆம்ஸ்ட்ராங்கைத் தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பலரை வழக்குரைஞர்களாக உருவாக்கி இருக்கிறார். ஆதிதிராவிட மக்களுக்காகப் போராடிய ஒரு தலைவர். அதைத்தாண்டி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இன்னொரு முகம் இருக்கிறது.
அந்த நிழல் உலகம் முகத்தால் ஏற்பட்ட பிரச்சினை தான் ஆம்ஸ்ட்ராங் என்ற உண்மை முகத்தை அழித்து விட்டது. அதில் அவர் கவனமாக இருக்கவில்லை என்றுதான் தெரிகிறது. குறிப்பாக ஆருத்ரா கோல்டு மோசடியை எடுத்துக் கொள்ளலாம். அதில் 5 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுகிறது. இந்த மோசடியை முன்வைத்து அதன் உரிமையாளர் ராஜசேகரிடம்
பலர் பணம் பறிக்க ஆரம்பித்தார்கள். ஹரீஷ் என்பவர் தான் நிறுவனத்தின் டைரக்டராக இருந்தார். அதைப்போன்று நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர்களைப் போலவே ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஒரு தொடர்பு இருந்தது. காவல்துறை தரப்பில் விசாரிக்கப்பட்ட வரையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை ஆம்ஸ்ட்ராங்கை விசாரிக்க இருந்ததென்றும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வழக்குரைஞர் அலெக்ஸ், ஆற்காடு சுரேஷ், எல்லாம் வருகிறார்கள். இந்த வழக்கில் ஹரீஷ் என்பவரை காவல்துறை கைது செய்தது. நடிகர் ஆர்.கே.சுரேஷை வெளிநாட்டிலிருந்தே பிடித்து வந்தார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ள கூலிப்படைக்கு மட்டும் ரூபாய்.10 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூளையாகச் செயல்பட்ட ரௌடிகளுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கலாமென்றும் மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார் மேலும் அவர் குறிப்பிட்ட தகவல் படி
இப்படி ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக படுகொலையானது தொடர்பாக தினமும் புதிது புதிதாகதா தகவல்கள் காவல்துறையினரின் விசாரணையில் கிடைத்து வருகிற நிலையில் ஆம்ஸ்ட்ராங் ரியல் எஸ்டேட் தொழில்கூட ஈடுபட்டு வந்தார். அவரை இப்போது புதைத்துள்ள ஊரில் இவர் மூலம் பல ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த டீலிங்கில் இவருக்குப் பங்கு உண்டு என்று விசாரணையில் தெரிகிறது. இந்தத் தொழில் போட்டியால் நிறையப் பகை ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருந்து வந்துள்ளது. அவர் தைரியமானவர். நல்ல தற்காப்புக் கலைகள் தெரிந்தவர். பாக்சர். அவர் ஒரு கைத்துப்பாக்கி கூட பாதுகாப்புக்கு வைத்திருந்தார். அந்தத் தைரியத்தால் அவர் காவல்துறையில் ஒரு பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி ஏந்திய காவலரைக் கேட்டுப் பெறத் தவறிவிட்டார். அதற்குக் காரணம், தன் மேல் இருந்த நம்பிக்கை.இவரைக் கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தலைமையில். தான் கொலை நடக்கிறது. இந்தக் கும்பலுக்கு மட்டும் 10 கோடி ரூபாய் பேசப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 6 பேரைத் தாண்டி மொத்தம் 15 பேர் சரண்டர் ஆகியிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் வேறு சிலரும் இருக்கிறார்கள்.
குறிப்பாக ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். அவர் பெயரை நான் இப்போது சொல்ல முடியாது. மேலும் திண்டுக்கல் மோகன் ராம் என்ற ரவுடியின் கைவரிசையும் உள்ளது. இவன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரவுடி. இதுவரை சிக்கியதே இல்லை. தலைமறைவு தான். இவரது சிஷ்யன்தான் சீர்காழி சத்யா. அவரை காவல்துறை இப்போது பிடித்துள்ளது. அவனிடமிருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப் பட்டுள்ளது. இவர்கள் பின்னணியில் மிகப்பெரிய பணக்காரர் ரவுடி ஒருவர் உள்ளார். அவருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டவர் நெட்டூர் கண்ணன் தான். இவன் ஒரு வாடகைக் கொலையாளி. இவர் கூடவே பாயசம் பரமசிவம், சீசிங் ராஜா, சைதை சுகு, நாகேந்திரன் எனப் பலர் உள்ளனர். ஆகவே, இது திட்டமிட்ட படுகொலை. சரண்டர் ஆன கும்பலுக்கே ரூபாய் 10 கோடி என்றால், இதன் மூளையாக இருந்த ரௌடிகளுக்கு எத்தனை கோடி வழங்கப்பட்டிருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்?” என்கிறார். இந்தப் பிரச்சினையில் ஆருத்ரா கோல்டு உரிமையாளரை ஆம்ஸ்ட்ராங் நேரடியாகவே டீல் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த கொலைக்கு முக்கிய காரணமாகவும் பின்புலமாகவும் இருந்துள்ளது என்கிறார் அவர். இதில் பொது நீதி யாதெனில் :-"குன்றத்துல கோயிலு கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு ...கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயிலு கட்டி ..... போறேன் ........ல.....இவரை இது நாள் வரை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க காவல் காத்தவர்கள் உள்ளிட்ட யாருக்கும் வாய்ப்பேயில்லை, உளவுக் காவல்துறைக்கு தெரியாதா இந்த சென்னை பெண் தாதாவின் வடிவம் அஞ்சலை ... இந்த நவீன சொர்னாக்காவை.
கருத்துகள்