தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக ஐபி சிறப்பு இயக்குநர் டிவி ரவிச்சந்திரன் நியமனம்.
தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக உளவுத்துறை (IB)சிறப்பு இயக்குநராக பதவி வகித்த தமிழக பேட்ஜ் இந்தியக் காவல் பணி அதிகாரியான டி வி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போது தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகரான ராஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்புக் கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்ட நிலையில் தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபி சிறப்பு இயக்குநரான டிவி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ஜ் இந்திய காவல் பணி அதிகாரி டிவி ரவிச்சந்திரன். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் டிவி ரவிச்சந்திரனின் தந்தையார், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் வனத்துறைச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
தமிழ்நாட்டின் பல நகரங்களில் காவல்துறை உயர் அதிகாரியாகப் பணி செய்து, நாகர்கோவில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக முதன் முதலில் பணியிலிணைந்தார். பின் கடலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் தமிழ்நாடு காவல்துறை கியூ பிரிவு கண்காணிப்பாளர், ஊழல் தடுப்புக்- கண்காணிப்புத்துறை கண்காணிப்பாளராகவும் பணி செய்த டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ்.2000 ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து மத்திய அரசுப் பணிக்கு மாற்றமான டிவி ரவிச்சந்திரன் ஐபிஎஸ், உளவுத்துறையான IB-ல் டெல்லியில் பணியாற்றினார். சென்னையிலுள்ள உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஜெர்மனியின் பெர்லினில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்தார் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் உளவுத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.பின்னர் 2023-ஆம் ஆண்டில் உளவுத்துறை சிறப்பு இயக்குநராக பதவி வகித்த நிலையில் தற்போது தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போது தேசிய பாதுகாப்புதுணை ஆலோசகருமான ரஜீந்தர் கன்னா, தேசியப் பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்
கருத்துகள்