மண் சரிவு காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரயில்கள் மாற்று வழிப்பாதையில் இயக்கப்பட்டது
கொங்கன் ரயில்வேயின் ரத்னகிரி பிராந்தியத்தில் திவான் கவாட்டி – வின்ஹெர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றங்களை கொங்கன் ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வண்டி எண் 12133 சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திலிருந்து ஜூலை 14 அன்றிரவு மணி 9.50-க்கு மங்களூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டிய ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, வண்டி எண் 12134 மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (15.07.2024) மாலை மணி 4.35-க்கு சத்ரபதி சிவாஜி முனையத்திற்கு இயக்கப்பட வேண்டிய ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், வண்டி எண் 12620 மங்களூர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து இன்று (15.07.2024) பிற்பகல் மணி 12.45-க்கு லோக்மான்ய திலக் முனையத்திற்கு இயக்கப்பட வேண்டிய ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
மாற்றுவழிப் பாதையில் இயக்கப்பட்ட ரயில்கள்
வண்டி எண் 12617 எர்ணாகுளம் – நிஜாமூதின் மங்களா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (14.07.2024) மட்கான் – லோண்டா – மிராஜ் – புனே- மன்மாட் வழியாக இயக்கப்பட்டது.
வண்டி எண் 20909 கொச்சுவேலி – போர்பந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (14.07.2024) மட்கான் – லோண்டா – மிராஜ் – புனே – கர்ஜாட் – பன்வேல் வழியாக இயக்கப்பட்டது.
வண்டி எண் 163469 திருவனந்தபுரம் – லோக்மான்ய திலக் முனையம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (14.07.2024) மட்கான் – லோண்டா – மிராஜ் வழியாக இயக்கப்பட்டது.
கருத்துகள்