இஸ்லாமிய மதத்தில் ஆதரவற்ற நிலையில், வறுமையில் தவிக்கும் பெண்களுக்கு
உதவிடும் வகையில், 1892 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சியில் ஆற்காடு நவாப் சார்பில், 'முகமதிய கோஷா விதவைகள் உதவி அறக்கட்டளை' எனும் அமைப்பு துவங்கப்பட்டது. பின்னர் அது, 'முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம்' எனப், பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அது, இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1976 ஆம் ஆண்டில் தமிழநாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவரை அதன் தலைவராகக் கொண்டு, இந்தச் சங்கங்கள் செயல்படுகின்றன.
சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்தச் சங்கம், 2007 ஆம் ஆண்டில் மற்ற மாவட்டங்களிலும் தனித்தனியாக துவங்கப்பட்டன. தற் போதைய நிலவரப்படி, 38 மாவட்டங்களில், 43 முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கங்கள் செயல்படுகின்றன.
இந்தச் சங்கங்கள் வாயிலாக, இதுவரை, 3.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதி ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பத்திரப்பதிவின்போது, பொதுவாக கொடி நாள் நிதி வசூலிப்பது வழக்கம். ஆனால், தற்போது முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கு நிதி திரட்ட பதிவுத்துறை உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதே போல், பிற மதங்களைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்களுக்கும் உதவ, மாநில பத்திரப் பதிவுத்துறை பரிந்துரைக்குமா என்ற வினா தற்போது எழுந்துள்ளது.
ஆதரவற்ற பெண்களுக்காக அரசின் பல்வேறு துறைகள் சார்பில், சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், இப்படி தனித்தனியாக மதம் சார்ந்த நிதி திரட்டப் பரிந்துரைப்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி வருமா ? வரும் எனில் ஏன் நடவடிக்கைகள் இல்லை என மிஸ்டர் பொதுஜனம் எழுப்பும் வினா இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கருத்து என்ன என்பதே நமது எழு வினாவாகும்.ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் வெளிவந்த செய்தி இது முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.
இந்தச் சங்கம் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு உதவி செய்தல், மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், கைவினைப் பொருள்கள் செய்யப் பயிற்சி அளித்து, சிறு தொழில் தொடங்க உதவுதல், விதவைகள், முதியோருக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல். மருத்துவ உதவி செய்தல், வியாபாரம், தொழில், கல்வித் துறையில் உதவுதல், சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பல தரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம், தேவையான பெண்களுக்கு கடனுதவி அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள அனைத்துப் பெண்களும் பயனடைய மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைச் சந்தித்து பயன் பெறலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.இத் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
இச்சங்கங்கள் உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன. தமிழ்நாடு அரசு முன்னரே குறிப்பிட்டவாறு சங்கங்கள் திரட்டிய நிதிக்கு இணை மான்யமாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூபாய்.10 இலட்சம் ஆண்டுதோறும் அரசு வழங்குகின்றது.
கருத்துகள்