ரூபாய்.70 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த பிரமுகர் அக் கட்சியிலிருந்து நீக்கம்
செய்யப்பட்டார். கைதான சையது இப்ராஹிம் என்ற நபரிடம் சென்னை புறநகர் கிளாம்பாக்கம் பேருந்து
நிலையத்தில் சிக்கிய ரூபாய்.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கில் கைதான சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கும் ஏற்கெனவே போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான குழுவினர் ஜூலை மாதம் 24-ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது. அவர் கையில் வைத்திருந்த பையில் 5.970 கிலோ கிராம் எடைகொண்ட போதைப் பொருள்கள் இருந்ததைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை வைத்திருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மானைக் கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை புறநகர் செங்குன்றம் பகுதியிலுள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 954 கிராம் போதைப் பொருள்கள் மற்றும் ரூபாய்.7 லட்சம் பணத்தையும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி பறிமுதல் ஆனது, பறிமுதல் செய்யப்பட்ட 6.924 கிலோ போதைப் பொருளிகளின் சந்தை மதிப்பில் ரூபாய்.70 கோடியாகும். காவல்துறையின் தொடர் விசாரணையில் இந்தப் போதைப் பொருட்களை இராமநாதபுரம் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டதும் தெரியவந்தது. மேலும், கைதான பைசுல் ரஹ்மான் அளித்த தகவலின் பேரில் சென்னையைச் சேர்ந்த மன்சூர், இராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் பின்னணி குறித்து மத்திய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்ததில் சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவரென்பது தெரியவ ந்தது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கைதாகியுள்ள சையது இப்ராஹிம் திமுகவில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் பொறுப்பிலிருந்துள்ளார். இந்தக் கும்பல் ஏற்கெனவே முறை முறை போதைப் பொருட்களைக் கடத்தியதும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்குக் கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பேருந்து மற்றும் கார்களில் இராமநாதபுரத்துக்கு கடத்திச் சென்று அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கருத்துகள்