சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகில் மஞ்சுவிரட்டு மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு சகோதரர்கள் வெட்டிப் படுகொலை.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகிலுள்ள நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் மஞ்சுவிரட்டிற்காக காளை மாடுகளை வளர்த்து வரும் இருவரும் அவர்களது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகிலுள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷ், சாத்தரசன்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீன், காளையார் கோவில் அருகிலுள்ள அஜய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மஞ்சு விரட்டுப் போட்டிகளில் தங்களது மாடுகளை அவிழ்த்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கின்ற நிலையில்,
ஜூன் மாதம் 22 ஆம் தேதி பனங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் அவர்கள் மாடுகளை அவிழ்த்து விட்டபோது அதனை புது பட்டியை சேர்ந்த மதன் என்பவரது நண்பர்கள் சேர்ந்து பிடித்ததாகவும் அதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறு கை கலப்பானதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரும் தனது நண்பர்களான ராஜேஷ், நவீன் அகியோர்களுடன் காளையார்கோவிலருகிலுள்ள கே.கே.ஆர் நகர் பின்புறமுள்ள சவுக்குத் தோப்பிற்கு அருகில் விவசாய நிலத்தில் தனது மாடுகளுடன் தங்கி இருந்த போது. நேற்று நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த எட்டு நபர்கள் கொண்ட கும்பல் அண்ணன் தம்பிகளான ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாக அங்கிருந்து தப்பிய ராஜேஷ், நவீன் ஆகிய இருவரும் காளையார்கோவில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறைத் துணை கண்காணிப்பாளர் சிபி தலைமையிலான காவலர்கள் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் தடயங்களைச் சேகரித்து குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு இறந்த இரண்டு நபர்களான அண்ணன், தம்பி மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையிலுள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் சிவகங்கையிலுள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூன்று இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் அருகில் கொல்லங்குடி பகுதியிலுள்ள தைலமரக் காட்டுக்குள் இருந்த சுபாஷ், ஜெயசூர்யா மற்றும் 3 நண்பர்களையம் முன் விரோதத்தால் பயங்கர ஆயுதங்களால் அண்ணன் தம்பி சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை வெட்டி கொலை செய்து விட்டு மற்ற மூன்றுபேரை வெட்ட முற்படும் பொழுது தப்பி ஓடி உள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காளையார்கோவில் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்