வங்காள தேசத்தின் அரசு வேலை வாய்ப்புகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பு, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளான அடுத்த தலைமுறை பேரன் பேத்திகள், உறவினர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் நிலையில், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது அது வன்முறையாகவும் மாறியது. இந்தப் போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அணைத்தும் மூடப்பட்டன, இணைய வழிச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாணவர்கள் அமைப்பினர் மறுத்து விட்டனர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தொடர்ச்சியான போராட்டங்களால் பதற்றமான சூழல்கள் நிலவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில்,
ஊரடங்குச் சட்ட விதிமுறைகளை மீறுவோரைக் கண்டதும் துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்தார். தொடர் போராட்டங்களால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை உள்ளிட்டவைகளுக்காக வங்காள தேசம் சென்ற இந்தியர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். அதேபோல் அமெரிக்கர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்காள தேசத்திற்குச் செல்ல வேண்டாமென அந்த நாட்டரசு உத்தரவிட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் வங்கள தேசத்திற்குமிடையே நடைபெற்ற போரில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாதென்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டுமென்றும் 2024 ஜூன் மாதம் 5 ஆம் தேதி அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்குக் காரணமெனக் கூறப்படுகிறது. நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தது. கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. பாதுகாப்புப் பணியில் காவல்துறையினருடன் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இணைய வழி சேவைக முடக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. மத்திய வங்காள தேசத்திலுள்ள நர்சிங்டி சிறையை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு. சிறைக்கு தீவைத்தவர்கள், நூற்றுக்கணக்கான கைதிகளையும் விடுவித்தனர்.
திறமையின் அடிப்படையில் தான் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா ஜூலை மாதம் 14-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது.
ஆம்னெஸ்ட் இண்டர்நேஷனல் அமைப்பின் பாபு ராம் பந்த் வெளியிட்ட அறிக்கையில், “வங்காள தேசத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும்போராட்டத்துக்கு எதிராக வங்காள தேச அதிகாரிகளின் முழுமையான சகிப்புத் தன்மை இன்மையைத் தான் இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்திலுள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. அது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து செயல்படுகிறது.
அது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு எல்லைச் சாவடி வழியாக பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். தவிர டாக்கா மற்றும் சிட்டகாங்கிலிருந்து சுமார் 200 மாணவர்கள் வழக்கமான விமான சேவை மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இந்திய மாணவர் எண்ணிக்கை 998 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகம், சிட்டகாங், ராஜ்ஷாகி, சில்ஹெட், குல்னா ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் உதவுகின்றன. இன்னும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வங்காள தேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ளனர். அவர்களுடன் இந்தியத் தூதரகங்கள் தொடர்பிலிருந்து வருகின்றன. தேவையான உதவிகளை செய்தும் வருகின்றன.
சாலை வழியாக நாடு திரும்புவோருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வங்காள தேசத்திலிருந்து தொடர் விமான சேவை உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்காக வங்காள தேச சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் ஒங்கிணைந்து செயல்படுகிறது. என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது
.
மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்பான தகவல்களுக்கு டாக்கா தூதரகம் மற்றும் பல துணைத் தூதரகங்கள் உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்வங்காள தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்காள தேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கருத்துகள்