சென்னையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் மக்கள் மருந்தக மையங்களின் உரிமையாளர்களும், சென்னையில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தில் உதவி மேலாளர் திரு நாராயணா பங்கேற்று 400-க்கும் அதிகமான எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பொது மருந்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரை நிகழ்த்தினார்.
எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தர் டாக்டர் எஸ் கீதாலட்சுமி இந்நிகழ்வில் பங்கேற்று தேசிய மருத்துவர் தின நோக்கம் குறித்து உரையாற்றினார். தேவைப்படும் மக்களுக்கு மக்கள் மருந்தக மருந்துகளை வாங்குமாறு ஊக்கப்படுத்தவேண்டும் என்று பங்கேற்பாளர்களிடம் வலியுறுத்தினார்.
உடல் ஆரோக்கியம் என்ற பரிசுடன் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் ஓய்வின்றி பாடுபடும் மருத்துவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். மேலும் இந்த நிகழ்வில், 30 துறைத்தலைவர்கள், மூத்த மருத்துவர்கள் பங்கேற்று மக்கள் மருந்தக இணைப்பு அதிகாரியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றனர்.மருத்துவர்கள் தினத்தன்று மருத்துவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"மருத்துவர்கள் தின DoctorsDay நல்வாழ்த்துகள். நமது சுகாதார நாயகர்களின் வியப்பூட்டும் அர்ப்பணிப்பு மற்றும் கருணையை கௌரவிக்கும் தினமாக இந்நாள் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க திறமையுடன் மிகவும் சவாலான சிக்கல்களை அவர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மருத்துவர்களுக்கு உரிய மரியாதை பரவலாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும் எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.”
கருத்துகள்