கட்டிட உறுதித்தன்மையை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கை சென்னையில் உள்ள இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது
இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் "கட்டிட உறுதித்தன்மையை மேம்படுத்துதல், நீர்புகாமை, ஈரப்பதம், கட்டுமானங்களுக்கான ரசாயனங்கள்" என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
2024, ஜூலை 22 அன்று மாலை சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, தொழில் வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, கட்டிடத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்துவது, சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஆராய்வதற்கான ஒரு தளத்தை வழங்குவதாக இருந்தது. அதிநவீன நீர்ப்புகாமை நுட்பங்கள், ஈரப்பதம் - தடுப்பு உத்திகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை தலைமை இயக்குநர் (தென் மண்டலம்) திரு யு.எஸ்.பி.யாதவ் சிறப்புரையாற்றினார். சர்வதேச தர நடைமுறைகளுக்கு இணையாக இந்திய தரத்தை ஒருங்கிணைப்பது குறித்து அவர் பேசினார்.
கருத்துகள்