பிரதமரை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.பின்னர் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்தார்
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் இன்று சந்தித்தார்.
அப்போது, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் ஆந்திரப்பிரதேசத்தின் வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரகவளர்ச்சி ஆகியவை குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், ஆந்திரப் பிரதேசத்தின் வேளாண் வளர்ச்சி, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டிற்கான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
கருத்துகள்