ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஆஷாதி ஏகாதசி திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"ஆஷாதி ஏகாதசி நல்வாழ்த்துகள்! பகவான் விட்டலின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்து, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சமுதாயத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கட்டும். இந்த நன்னாள் நம்மிடையே பக்தி, பணிவு மற்றும் இரக்கத்தைத் தூண்டட்டும். மேலும் ஏழைகளுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்ய நமக்கு உந்துதலாக இருக்கட்டும்.".
கருத்துகள்